இன விடுதலைப் போராட்டத்தில் முப்படையினராலும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீங்கள் ஒரு தீபம் ஏற்றியிருந்தீர்களா?

இது இனவாதம் கூடிய கருத்தாடல் அல்ல ஒரு யதார்த்தமான சிந்தனை மூலம் என் இனம் சார்ந்து எடுக்கப்பட்ட என் தனிப்பட்ட முடிவு அல்லது சபதம்.

இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுதமிழரின் இனவிடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த வீர மறவர்களுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தாமல் விட்டாலும் பரவாயில்லை அந்த இன விடுதலைப் போராட்டத்தில் முப்படையினராலும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நீங்கள் ஒரு தீபம் ஏற்றியிருந்தீர்களா?

ஆனால் மாறாக நீங்கள்  அந்த தமிழ் இன அழிப்பை மேற்கொண்ட முப்படையினரை நினைவு கொள்கின்றீர்கள். இது எவ் வகையில் நியாயம்? உங்களது மதம் சார்ந்து நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை விட உங்களது இச் செயல் படு பயங்கரமானது.

உங்களது வியாபாரத் தந்திரங்கள் மூலம்  எமது தமிழ்த்தேசத்தில் வாழ்கின்ற தமிழ்மக்களின் பொருளாதார வளங்களை சுரண்டி உங்கள் வியாபாரங்களை எமது மண்ணில் செழித்தோங்கச் செய்கின்ற நீங்கள் கொல்லப்பட்ட எங்கள் உறவுகளுக்காக தீபங்கள் ஏற்றமால் அந்த மக்களை கொன்றவர்களுக்கு தீபங்கள் அதுவும் எமது மண்ணில் ஏற்றுகின்றீர்கள்.

உங்களால் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் தமிழரின் பணத்தை எடுப்பதில் புரிதல்கள் இருக்கின்றது

உங்களது இவ் ஈனச் செயல்கண்டு இந்த இன விடுதலைப் போராட்டத்தை நேசித்தவனாக ஒரு தமிழனான நான் இன்று ஒரு முடிவு எடுகின்றேன். உன் உடல் இந்த தமிழ்த்தேசத்து மண்ணில் விழும் வரை உங்கள் இனம் சார்ந்த எவரிடமும் ஒரு சிறு பொருள் கூட வாங்கப்போவது இல்லை.

நல்ல முடிவுகள் அனுபவத்தில் இருந்து கிடைக்கிறது, அதிகமான அனுபவங்கள் தவறான முடிவில் இருந்தே கிடைக்கிறது...!!!

Powered by Blogger.