அம்பாறை சாய்ந்தமருது பிரதேச பாதுகாப்புத் துறையினர், பொலிசார் மற்றும் அரச அதிகாரிகளுடனான சந்திப்பு!!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேச பாதுகாப்புத் துறையினர், பொலிசார் மற்றும் அரச அதிகாரிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று  (08) முற்பகல் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.


ஜனாதிபதி அவர்களின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதி அவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கிழக்கு மாகாண முதன்மை செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்No comments

Powered by Blogger.