நந்திக்கடல் பத்தாண்டுகள்.!ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்–மீள் பகுதி1
இனவழிப்பில் முடிந்த ஈழப்போரைப் பற்றிய இராணுவ மட்டும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் அதிலிருந்து எப்படி “தீவிரவாதத்தை” ஒழிக்கலாம், எப்படி இன அமைதியை ஏற்படுத்தலாம் என்ற பார்வையிலேயே இருக்கும். உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்த உலக ஒழுங்கு காக்கப்படவேண்டும்,
அப்பொழுது சிலநேரம் இனவழிப்பு ஏற்படும், அதைப் பெரிது படுத்தினால் உலக ஒழுகிற்குத்தான் ஆபத்தானது, அவ்வொழுங்கில் எவ்வாறு தங்கள் நலனை முன்னிறுத்துவது என்ற பார்வையிலேயே இருக்கும். மொத்தத்தில் உலக அரசியல் என்பது பலபேர் ஒரே நேரத்தில் விளையாடும் ஒரு பெரிய சதுரங்க ஆட்டம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவோர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பர்.
தோல்வியுற்ற இனம் வரலாற்றிலிருந்து காணாமல் போகும். இதுவும் ஒருவகையில் தக்கது எஞ்சும் என்ற இடார்வினின் தத்துவம்தான். அனைவரும் அவர்களின் நலனை முன்னிறுத்தியே ஆடுகின்றனர். இதுதான் அதே ஆராய்ச்சியாளர்களின் பகுத்தறிவான ஆட்டக்கோட்பாடு (Game Theory) கூறும் பாதை. வேறு வழி இல்லை, அப்படி வழி இருந்தாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அவர்களுக்கு அவர்களின் சுயநலம்தான் முக்கியம். அதனால் ஈழப்போரைப் பற்றிய ஆய்வுகள் என்பது பெரும்பாலும் அவர்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுபவை என்பது வியப்பானது அல்ல. இக்கட்டுரையின் நோக்கம் ஈழப்போரிலிருந்து நாம் நமது நலனுக்கு என்ன கற்கலாம், அதன் மூலம் நாம் இந்த சதுரங்க ஆட்டத்தில் எது மாதிரியான காய்களை நகர்த்தி தப்பித்துக் கொள்ளலாம் என்பதே.
வரலாறு என்பது பெரிய கொலைக்குற்ற சவம் போன்றது. யாருடைய பேச்சையும் உண்மை என்று அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. வரலாற்றை எவ்வாறு பிரேத பரிசோதனை செய்கிறோம் என்பது நம்மிடம் உள்ள தத்துவக் கருவிகளைப் பொறுத்தே இருக்கும். இக்கட்டுரையில் நான் கற்ற சில தத்துவக் கருவிகளைக் கொண்டு ஈழப்போரை பரிசோதனை செய்து, அதிலிருந்து இன்றைக்குத் தேவையான பாடங்களை முன்வைக்கிறேன்.
இது எந்த வகையிலும் முழுமையான ஆய்வு அல்ல. அவற்றின் உண்மைத்தன்மை என்பது நான் உபயோகிக்கும் தத்துவக் கருவிகளின் உண்மைத் தன்மையையும், நானறிந்த வரலாற்றுத் தகவல்களையும் பொறுத்தே இருக்கும்.
பாடம் 1: ஈழப்போர் ஒரு பலமான தமிழ்த்தேசியத்திற்கு வித்திட்டுள்ளது
ஈழப்போரின் இனவழிப்பை உள்ளடக்கிய பேரழிவுகள் தமிழ்த்தேசியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். இது குறுகியகாலப் பார்வை. நீண்டகால நோக்கில் பார்த்தால் தமிழ்த்தேசியம் பலமடங்கு பலம் பெற வாய்ப்பளித்திருக்கிறது.. அதை அறிவதற்கு உயிர்களின் பரிணாம வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது என்கிற புரிதல் அவசியம்.
கிரேக்க கதைகளில் ஐதரா (hydra) என்ற பாம்பு வரும். அதன் தலையை வெட்டினால் வெட்டிய இடத்தில் மூன்று தலைகள் முளைக்கும். பின்பு ஒவ்வொரு தலையையும் வெட்ட வெட்ட மூன்று மூன்றாக முளைக்கும். அதனை பலவீனப்படுத்த முனைவது முடிவில் அதன் பலத்தைக் கூட்டிக்கொண்டே செல்லும். இக்கதை ஒரு புனைவுதான் என்றாலும், ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவ்வுலகில் உள்ள உயிர்கள் இதைப்போன்ற பலம்பெரும் தன்மையைப் பெற்றுள்ளன [1].
உதாரணமாக நாம் நோய்களைக் கட்டுப்படுத்த பலவித மருந்துகளை பயன்படுத்து வருகிறோம், ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால் இன்று நாம் காணும் கிருமிகள் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு கண்ட கிருமிகளை விட வீரியமிக்கதாக இருக்கின்றன. இன்று பல கிருமிகளை அழிப்பதற்கு மருந்துகள்கூட இல்லை [2].
அதே போல விவாசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் பூச்சிகளின் எதிர்ப்பு சக்தியை கூட்டிவிட்டுள்ளன. கிருமிகள் மீதான நமது “இனவழிப்பு” நடவடிக்கை, அவற்றை பலசாலி ஆக்கிவிட்டது. கிருமிகளும் பூச்சிகளும் பலமடைவதற்குக் அடைப்படைக் காரணம் அவற்றின் “கற்றலே”. அவை சுற்றுச்சூழலில் நடக்கும் விபத்துக்களிலிருந்து கற்று புது சூழலுக்கு ஏற்ப தம்மை மறு சீரமைத்துக் கொள்கின்றன. எப்பொழுது உயிர்கள் கற்கமுடியவில்லையோ, அப்பொழுது அவை அழிகின்றன. இந்த கற்றல் அவற்றின் மரபணு மாற்றங்கள் மூலம் இயற்கையில் தானாக நிகழ்கின்றன, அவை எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை.
மனித சமூகமும் ஓர் உயிர் போன்றதுதான், அதிலும் இதுபோன்ற வலுகூட்டல் நிகழ்வுகள் ஒரு அழிவிற்குப்பின் இடருக்குப்பின் ஏற்படுகின்றன. சமூகங்கள் மாறிய சூழலுக்கேற்ப தங்களை மறுசீரமைத்து அதிக பலம் வாய்ந்ததாக மாறுகின்றன. ஆனால் அவை தானாக நடப்பதில்லை; அவை ஓரளவு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஈழப்போரின் அழிவு தமிழ்த்தேசியத்தில் இதுபோன்ற ஒரு வலுகூட்டல் நிகழ்விற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. .
ஆனால் அது தானாக நடை பெறப்போவதில்லை. இந்த வலுகூட்டல் எவ்வாறு மனித சமூகங்களில் நடைபெறுகிறது என்று தெரிந்தால், அதை நாம் வலிந்து பல முயற்சிகள் மேற்கொண்டு முன்பைவிட ஒரு வலுவான தமிழ்த்தேசியத்தை உருவாக்கலாம். முதலில் வரலாற்றிலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம். பின்பு ஈழப்போர் எவ்வாறு அவ்வாறான வலுகூட்டலுக்கு வாய்ப்பளித்திருக்கிறது என்று பாப்போம்.
சப்பானியர்கள்:
இருநூறு வருடங்களாக வெளி உலகுக்குக் கதவை தாளிட்டிருந்த சப்பானை, 1853-இல் அமெரிக்கக் கடற்படைத் தளபதி பெரி (Matthew Perry) அவர்கள் பீரங்கிகளைப் பொருத்திய கப்பல்களுடன் முற்றுகையிட்டார்.
வணிகத்திற்கு சப்பான் கதவைத் திறக்கவேண்டும், இல்லையென்றால் போர் என்று மிரட்டினார். அப்பொழுது சப்பானிய வீரர்கள் வில்லும் வாளும் கொண்டிருந்தனர். தங்களது இயலாமையையும் பின்னடைவையும் உணர்ந்த அவர்கள் ஒரு நவீன சப்பானை உருவாக்க முடிவெடுத்தார்கள். அன்றைய சப்பான் பல வர்க்க வேறுபாடுகளுடன் ஒருவித சாதிக் கட்டமைப்புடன் இருந்தது.
அரசர் என்பவர் பெயரளவில்தான், அனைத்து அதிகாரமும் சோகன் என்ற படைத்தளபதியிடமே இருந்தன. படை வீரர்களான சாமுராய்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர். இது நவீன சப்பானை உருவாக்க பெரிய தடங்கலாக இருந்தது. இவ்வாறு இருந்த பல தடங்கல்களை நீக்கி, மக்களை ஒன்று திரட்ட ஒரு புதிய கற்பிதம் (narrative) தேவைப்பட்டது.
அதற்கு அவர்கள் தங்களது பழைய வரலாற்று கற்பிதங்களிலிருந்து உருவாக்கியதுதான் கோக்குட்டாய் (Kokutai) கற்பிதம் [3, 4]. இதன்படி அரசர் சூரியக்கடவுளின் புதல்வராகவும், சப்பான் என்பது அரசரை மையமாகக் கொண்ட ஒரு பெரிய குடும்பமாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கற்பிதத்தைக் கொண்டு சப்பானை நவீனமாக்கும் “மெய்சி மீட்பு” (Meiji Restoration) நடத்தப்பட்டது.
கோக்குட்டாய் அவர்களது பழைய வரலாறு; அதனை அவர்கள் மீட்க முனைவதால், இதை புரட்சி என்று பெயரிடாமால் மீட்பு என்று பெயரிட்டனர். சாதி வர்க்க வேறுபாடுகளை ஒழித்து தங்களை மறுசீரமைப்பு செய்து நவீன சப்பானை உருவாக்கினார்கள். கடற்படைத் தளபதி பெரி வந்து நூறு ஆண்டுகளுக்குள் அதே அமெரிக்காவுடன் சரிசமமாக போர் புரியும் வல்லமையை இரண்டாம் உலகப்போரில் நிரூபித்தார்கள். மொத்தத்தில் கோக்குட்டாயை அடித்தளமாக வைத்தே நவீன சப்பான் கட்டி எழுப்பப்பட்டது.
யூதர்கள்:
மனித சமூகத்தில் இந்த வலுகூட்டலுக்கான சிறந்த உதாரணம் என்றால் யூதர்கள்தான். அவர்களை அழிக்க பாபிலோனியர்கள், ரோமர்கள், நாசிகள் என்று பலர் வரலாற்றில் தோன்றி இனவழிப்பு செய்துள்ளனர், ஆனால் நடந்தது என்னவோ யூதர்கள் இன்றும் இருக்கிறார்கள், இனவழிப்பு செய்தொர் இன்றில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் இனவழிப்புகளில் இருந்து கற்று, தங்களை மறுசீரமைப்பு செய்து கொண்டதுதான்.
கி.மு 598-இல் அன்றைய இசுரேல் நாட்டை பாபிலோனியர்கள் ஆக்கிரமித்து, அவர்களின் கோவிலை இடித்து, இனவழிப்புக்கு உள்ளாக்கி, யூதர்களை இசுரேலிலிருந்து நாடு கடத்தி பாபிலோனுக்கு கொண்டு சென்றார்கள். அன்றைய யூதர்கள் தங்கள் அடையாளத்தை பாதுகாப்பதற்கு நாட்டையும், அரசரையும், கோவிலையும், பூசைகளையும் நம்பியே இருந்தனர். இவை அனைத்தையும் இழந்த நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எதிர்நோக்கிய முக்கிய சிக்கல் அடையாளத்தை எவ்வாறு காப்பது என்பதுதான். தங்கள் அடையாளத்தைக் காக்க தங்களது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதன் மூலமே சாத்தியம் என்றுணர்ந்து, பழைய நூல்களையும் கட்டுக்கதைகளையும் புனைந்து ஒரு நூலை உருவாக்கினர்.
அதுதான் இன்று நாம் காணும் பைபிளின் முதல் ஐந்து நூல்கள் [5].
அதுபோக புதிய சடங்குகளை உருவாக்கி தங்களது தனித்துவத்தை காத்தனர். மொத்த பைபிளின் கதை என்பது இழந்த நாட்டை மீண்டும் பெறுவோம் என்ற கருத்தை மையமாக வைத்தே எழுதப்பட்டது.
இவற்றைக்கொண்டு தங்களது வாழ்க்கை முறையை மறு சீரமைத்து தங்களை காத்துக்கொண்டனர். அதன் விளைவாக உருவானதுதான் யூத மதம் [6],
இன்று நாம் காணும் நவீன மதங்களின் ஆரம்பம். ஐம்பது வருடங்கள் கழித்து பாபிலோன் பெர்சியாவிடம் போரில் தோற்றபின், அவர்கள் “புதிய” யூதர்களாக நாடு திரும்பினர். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ரோமர்கள் இஸ்ரேலைப் பிடித்து, இனவழிப்புக்கு உள்ளாக்கி, கோவிலை இரண்டாவது முறையாக கி.பி. 70-இல் உடைத்தார்கள். இம்முறையும் யூதர்கள் தங்களை மாறிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார்கள். கோவில்களும் பூசைகளும் தங்களை காப்பாற்றாது, முறையான கற்றலின் மூலமே தங்களை காக்கமுடியும் என்று மறுசீரமைத்துக் கொண்டனர். உலகிலேயே அவர்கள்தான் 100% சதவிகித கல்வியறிவை 1000 வருடங்களுக்கு முன்பாகவே அடைந்தனர் [7].
நாடே இல்லாமல் 2000 வருடங்களாக வாழ்ந்தாலும், அவர்கள் கற்றல் மூலம் தங்கள் இன அடையாளத்தை இழக்காமல் பாதுகாத்தனர். கற்பிதங்கள் உணர்வுப் பூர்வமாக அவர்களை பிணைத்து அவர்களை ஒற்றுமையுடன் வைத்த்திருந்தது.
பின்பு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் யூத எதிர்ப்பு பரவியபோது, மீண்டும் கற்பிதங்களில் சீர்திருத்தம் கொண்டுவந்து, அவர்களின் நாட்டை மீட்டெடுக்க புதிய தலைமுறையை வளர்த்தெடுத்து வெற்றி கொண்டார்கள். நாசிகளின் இனவழிப்பு முடிவில் அவர்கள் பலம்பெறவே துணைபோனது.
“Jewish Nationalism was always influenced by the model of biblical Exodus, according to which an old generation had to expire in the desert before a new generation, free of the norms adopted during slavery, could be relied upon to conquer the land. Similarly, after 2000 years of Jewish life in Exile, it could not be expected that the same elite who led the people in “house of bondage” would lead them successfully into Promised Land. Ahad Ha’am, for example, was aware that the future of Zionist movement lay not with the parents in the synagogues but with the children who could be influenced in educational institutions. Ahad Ha’am wrote “that in a war of parents and children it is always the children who win in the end; the future is theirs”.[6]
அரேபியர்கள், மேற்குலகம், பொதுவுடைமை:
எந்த பெரிய பொருளாதாரமும் இல்லாத பாலைவனத்தில் பல சிறுசிறு குழுக்களாக சிதறி ஒருவருக்கொருவர் போரிட்டு சிதைந்து கொண்டிருந்தார்கள். ஒரு சமூகம் எவ்வளவு கீழே போகமுடியுமோ அவ்வளவு கீழே இருந்தார்கள். அப்பொழுதுதான் இசுலாம் என்ற ஒரு புதிய கற்பிதம் தோன்றி அரேபிய சமூகத்தை மறுசீரமைத்து பொற்காலம் கண்டது [8].
இப்பொழுதைய மேற்குலகம் அன்று இருண்ட காலத்தில் இருந்தது.
இதைப்போலவே 16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சபையில் நடந்த ஊழல்கள் ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களிடேயே கொதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக மார்ட்டின் லூதர் அவர்கள் கிருத்துவ கற்பிதத்தில் கொண்டுவந்த சீர்திருத்தம் (Reformation), மேற்குலகை மறுசீரமைத்து இன்றைய நவீன உலகை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தது [9].
அதே வழியில், தொழிலாளர்கள் சிக்கலில் தவித்த உலகில், “இதுவரை வாழ்ந்த மனித சமூகங்களின் வரலாறு என்பதே வர்க்கங்களுக்கு இடையேயான போர்தான்” என்று ஒரு புதிய கற்பிதத்தை உருவாக்கி மறுசீரமைப்பை முன்மொழிந்தார் மார்க்சு. அது உலகில் பல நாடுகளை கவிழ்த்து புரட்சியை உருவாக்கியது. எந்த நாடுகளில் இக்கற்பிதம் அந்நாடுகளிலுள்ள கற்பிதங்களுடன் ஒத்து சென்றதோ, அங்கே மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. கற்பிதங்கள் முரணாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை உதாரணமாக இசுலாமிய நாடுகளில் இக்கற்பிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை [10].
இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து எவ்வாறு சமூகம் இடர்களின்போது மறுசீரமைப்பு செய்துகொள்கிறது என்பது ஓரளவு புரிந்திருக்கும். இந்த முறையை கீழுள்ள படம் விளக்குகிறது. அடிப்படையில் அறிவுசீவிகள் மாற்றத்திற்கான தேவையின்படி புது கற்பிதங்களை உருவாக்குகிறார்கள்,
பழைய கற்பிதங்களை தூசுதட்டி பயன்படுத்துகிறார்கள், அல்லது கற்பிதங்களுக்கு புதிய பொருளைத் தருகிறார்கள். புதிய கற்பிதங்கள் மக்களிடம் பரப்படுகின்றன. பின்பு கற்பிதங்களைக் கொண்டு கருத்துருவாக்கம் செய்து மக்களிடையே மறுசீரமைப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். முடிவில் மறுசீரமைப்பை திட்டமிட்டு செய்து முடிக்கிறார்கள்.
மேலுள்ள உதாரணங்கள் பெரும்பாலும் கற்பனை அல்லது இறைக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஆனால் கற்பிதங்கள் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவை உண்மையின் அடிப்படையிலும் இருக்கலாம். சொல்லப்போனால் இக்கற்பிதங்கள் தங்களை “உண்மை” என்று கூறியே மக்களை ஈர்க்கிறது.
ஏன் மறுசீரமைப்பு இவ்வாறு நடைபெறவேண்டும் என்பதற்குக் காரணமாக நான் கருதுவது:
கற்பிதங்கள் (narratives) உணர்வுப்பூர்வமாக மக்களை பிணைக்கிறது. அரசியல் ஆதரவு உணர்வுகளாலே தீர்மானிக்கப்படுகினறன,
பகுத்தறிவினால் அல்ல. பகுத்தறிவு என்பது உணர்வுகளுக்கு அடிமை என்ற அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன[20].
இதனடிப்படையில் கற்பிதங்கள் எவ்வாறு இன அரசியலைத் தீர்மானிக்கிறது என்று காஃப்மன் விளக்குகிறார் [11].
இதைப்பற்றிய எனது கட்டுரையை முடிவில் உள்ள சுட்டியில் காணலாம் [18]. அதுபோக வரலாறு என்பது தேசியத்தின் பாதையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காராணி என்பதை தேசியம் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளுவது [12, 19].
அவ்வாறு இருக்கும் பொழுது, கற்பிதங்கள் சமூக மறுசீரமைப்புக்கும் பயன்படுகிறது என்பது வியப்பல்ல. இது காஃப்மன் தத்துவத்தின் நீட்சியாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒர் உயிரின் மறுசீரமைப்புக்கு மரபணு மாற்றங்கள் எவ்வாறு துணைபுரிகிறதோ, அதுபோல ஒரு சமூகத்தின் கற்பித மாற்றங்கள் சமூகத்தை மறுசீரமைக்கிறது. இது ஒரு விபத்து அல்ல. மனிதன் என்பவன் மரபணு-பண்பாட்டு கூட்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் உருவானவன் [15].
உயிரியலாளர் ரிச்சர்டு டாக்கின்சு மரபணுக்கள் எவ்வாறு சுயநலமுடன் (selfish genes) உயிர்களை இயக்குகிறதோ [13], அதுபோல கருத்துக்களும், கற்பிதங்களும் அவற்றின் சுயநல பரவலுக்காக (selfish memes) நம்மை இயக்குகினறன [14] என்கிறார்.
ஏன் எவரோ உருவாக்கிய கற்பிதங்கள் நம்மை இயக்கவேண்டும், இது முட்டாள்தனமானது என்று நாம் நினைக்கலாம். மனிதனின் தன்மை அவ்வாறு பரிணாமத்தால் உருவாகியிருக்கிறது, அதை மாற்ற முடியாது. கற்பிதங்களின் இந்த இயக்கு சக்தியை உலகிலுள்ள அனைத்து சமூகங்களிலும் காணலாம்.
சிக்கலான அமைப்புகளின் பரிணாமத்தை (Complex Adaptive Systems) பற்றிய ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்றால்: அழியும் நிலையில் உள்ள சில அமைப்புகள் தமக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி மற்ற அனைத்தையும் விட உயர்ந்து பலசாலி ஆகின்றது. அவ்வாறு முடியாதவை அழிகின்றன. அதே நேரம் பலசாலியாக உள்ள அமைப்புகள் தமக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல் தடுமாறுகின்றன. அவை காலப்போக்கில் சரிகின்றன [16].
இனி ஈழப்போர் எவ்வாறு நமது வலுகூட்டலுக்கு வாய்ப்பளித்திருக்கிறது என்று பார்ப்போம்.
ஈழப்போரின் கொடை:
புலிகள் இயக்கம் ஈழ நாட்டை அடைவதுதான் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இறுதிப்போரில் பல்வேறு சதிகளினால், சக்திகளினால் அக்குறிக்கோளில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால் முதன்மை குறிக்கோளில் தோல்வியுற்றாலும், அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அதைவிட ஒரு பெரிய குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளார்கள்.
அதுதான் புதிய கற்பித உருவாக்கம் (new narrative). உலகிலுள்ள எந்த மதங்களும் அவர்களை போல உணர்வுகளை உருவாக்க முடியவில்லை. சிறு தொகையான மக்கள் பலத்தைக் கொண்டு, பலம் வாய்ந்த இரண்டு இராணுவங்களை தோற்கடித்தார்கள். உலக வல்லுனர்களெல்லாம் பயிற்சி கொடுத்தும் முடியவில்லை. இதில்தான் அவர்களின் உணர்வு பலத்தை பார்க்கவேண்டும். இவை அனைத்தையும் அவர்கள் மத சார்பற்ற கற்பிதங்களால் செய்ய முடிந்திருக்கிறது.
இறுதி யுத்தத்தில் அவர்கள் ஒரு நல்ல வரலாற்றை விட்டுச்செல்லவேண்டும் என்று உறுதியாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி கருதுகிறார். வரலாற்றுக் கற்பிதங்கள்தான் ஒரு சமூகத்தின் இருப்புக்கான ஆயுதம். அதன் முலமே அரசியலும் நடைபெறுகிறது, அதன் வழியேதான் சமூக மறுசீரமைப்புகளும் நடக்கின்றன.
புலிகள் தங்கள் அழிவிலும் யாருக்கும் கிடைக்காத ஒரு நிகரில்லா ஆயுதத்தை, ஒரு வரலாற்றுக் கற்பிதத்தை (historical narrative) உருவாக்கி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்களும் அந்த ஆயுதத்தின் அங்கமாகிவிட்டார்கள். மற்ற இனங்களுக்கு புனைவுகளால் ஆன கற்பிதங்களே உள்ளன, உண்மையான கற்பிதங்கள் இல்லை.
ஆனால் புலிகள் ஒரு உண்மையான, உணர்வுகளில் மற்ற அனைத்து கற்பிதங்களையும் விட பலமான, ஒரு முன்னேற்றகரமான, புரட்சிகரமான, மத சார்பற்ற, 21-ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கற்பிதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மாபெரும் சாதனை, மாபெரும் கொடை.
இது அவர்களின் தலையாய குறிக்கோளான ஈழ நாட்டையும் விட சாதனையில் பெரிது. ஈழமோ தமிழகமோ எதிர்கால உலக சூடேற்றத்தில் அழிவதற்கு வாய்ப்பிருக்கிறது. நிலத்தின் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல. ஆனால் கற்பிதங்களின் மாற்றம் நிரந்தரமானது. அவர்களின் கற்பிதம் காலம் உள்ளவரை தமிழினத்தைக் காக்கும் வல்லமை கொண்டது.
ஓர் இனத்தின் வலிமை என்பது அதன் எண்ணிக்கையிலோ, எல்லையிலோ இல்லை; அதன் கற்பிதத்தில்தான் உள்ளது. குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள மரபணு வேறுபாடு வெறும் 4% தான், ஆனால் நமது ஆற்றலுடன் குரங்கை ஒப்பிட முடியாது. அதுபோலத்தான் புலிகளின் கற்பிதங்களும். அதை உள்வாங்கிய தமிழ்ச்சமூகத்தின் ஆற்றலும் அதைப்போலத்தான் பலமடங்கு அதிகமாக இருக்கும்.
அதை அவர்கள் ஏற்கனவே உலகறிய நிரூபித்திருக்கிறார்கள். நமது எதிரிகள் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அறுந்துபோன இந்துத்வா, மகாவம்ச கற்பிதங்களைக் கொண்டு நம்மை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் புலிகள் உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்கள் முன்னால் இவை சுக்குநூறாக .நொறுங்கும்.
இக்கற்பித்ததைக் கொண்டு இழந்ததை மட்டும் நாம் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, மறுசீரமைத்து, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம்.
அதற்கான வலிமை அக்கற்பிதங்களுக்கு உண்டு. இதை ஏற்கனவே புலிகள் போர்த்துறையில் செய்து காட்டிவிட்டார்கள். நாம் மற்ற துறைகளுக்கு கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர்களின் கற்பிதங்கள் அடிப்படையாக அமையும். சப்பான் எவ்வாறு மறுசீரமைப்பு செய்து சிறப்படைந்தார்களோ, அதைவிட நம்மால் சிறப்பாக செய்வதற்கேற்ற கற்பிதங்கள் நமக்கு கிடைத்துள்ளன. பிரபாகரன் அவர்கள் வரலாற்றின் திறனை நன்றாக அறிந்தவர்:
“இலட்சியத்தால் ஒன்றுபட்டு உறுதி பூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள். இந்த வரலாற்றின் படைப்பாக எமது தேசிய மண் ஒரு சுதந்திர பூமியாக பிறப்பெடுக்கும் என்பது திண்ணம். “
பிரபாகரன் அவர்கள் கூறியதில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டாவது பாகம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
புலிகளின் கற்பிதங்களின் வலிமை எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் புலிகளின் வரலாற்றை மறைக்க முழு மூச்சில் செயல்படுகிறார்கள். அவர்களின் கல்லறைகளை இடித்தார்கள், போரில் அழியாத பதுங்கு கட்டிடங்களைத் வெடி வைத்து தகர்த்தார்கள்,
தலைவர்களின் உடல்களை மறைத்தார்கள், ஐயா நெடுமாறனின் நூலை எரிக்க நீதி மன்றம் உத்தரவிடுகிறது. புலிகள் பற்றிய திரைப் படங்களுக்கு தடை இடுகிறது. அவர்கள் அஞ்சுவது புலிகளின் வரலாறு என்ற மாபெரும் ஆயுதத்திற்குத்தான். அதற்கு முன் அவர்களது இந்துத்வா மகாவம்ச கட்டுக்கதைகள் அப்பளமாக நொறுங்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளின் வரலாற்றை மறைக்காமல் தமிழரை அழிக்க முடியாது. ஒரு நாட்டின் ஆன்மா என்பது போரின் மூலமே உருவாகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல் (Hegel)
“Every nation that wishes to emerge into existence must assert its individuality or soul by entering the stage of History, that is to say, by fighting other nations.” [17]
ஈழப்போரின் அழிவு என்பது தமிழர்தேசத்தின் ஆன்மாவின் பிறப்பு, நமது வரலாற்று கற்பிதங்களின் பிறப்பு. அந்த ஆன்மாவை புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம் ஒவ்வொருவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பது நாம் செய்யவேண்டிய முக்கிய செயல்பாடு. ஒவ்வொரு வீட்டிலும் மாவீரர் நாள் கொண்டாடப்படும் நாள் வரும்பொழுது, தமிழின விடிவு வெகு தூரத்தில் இருக்கப் போவதில்லை.
அது ஒரு புதிய தமிழ்ச்சமூகத்தை, நாம் எண்ணிக்கூட பார்க்க முடியாத கனவுதேசத்தைப் படைக்கும். அதுதான் வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம் வரும் உணர்வுகளின் பலம். இன்று தமிழ்த்தேசிய அரசியலை இயக்குபவர்களுக்கு உந்து சக்தியாக இருப்பதும் அவர்கள் உள்வாங்கிய புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள்தான்.
பகுத்தறிவை மட்டும் கொண்டு மக்களை எழுப்பிவிடலாம் என்று நினைத்தால், தோல்விதான் மிஞ்சும். மனிதனின் மூளை உணர்வுகளுக்கே செவி மடுக்கும். புலிகளின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமிது.
நீண்ட காலமாக நாம் விரும்பும் ஒரு நல்ல பலமான சமூகத்தை அமைப்பதில் நாம் தோற்றுப்போவதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் கருதுவது தமிழர்களுக்கு என்று மக்களை உணர்வுகளால் பிணைக்கும் ஒரு கற்பிதம் இல்லை என்பதுதான். புலிகள் போராட்டத்தை ஆரம்பிக்கும்பொழுது அவர்களுக்கும் இல்லை. இந்தக் கற்பிதத்தின் தேவையை மறைமலை அடிகள்போன்ற அறிவுசீவிகள் நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அவ்வாறான கற்பிதங்கள் வரலாற்றில் கிடைக்கவில்லை.
அடிகள் தமிழரின் பண்டைய வரலாற்றை எழுதினார், தமிழர் மதம் என்று சைவ மதத்தை முன்மொழிந்தார் [21]. ஆனால் இவை எவற்றுக்கும் மக்களை உணர்வுப்பூர்வமாகப் பிணைக்கும் திறன் இல்லை. மேலும் மதம் நம்மைப் பின்னோக்கி இழுத்துச்செல்வது, காலத்திற்கு ஒவ்வாதது. இந்த கற்பிதத்தின் தேவையை ஈழப்போர் பூர்த்தி மட்டும் செய்யாமல், அனைத்திலும் சிறப்பான கற்பித்ததை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
இன்று பரவலாக நிலவும் சிந்தனைகள் என்னெவென்றால், நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் அனைத்தும் அரசியல் சிக்கல்களே. அதனால் அரசியல்தான் இதற்குத் தீர்வு என்ற அடிப்படையில் சிக்கல்கள் அணுகப்படுகின்றன. இது ஓர் எளிமையான பார்வை. சமூகம் என்பது சிக்கலானது, அதன் உண்மையான சிக்கலை உணர்ந்து காய்களை நகர்த்துவதன் மூலமே வெற்றிகொள்ள முடியும். அரசியல் வெற்றி என்பது மக்களிடமிருக்கும் கற்பிதங்களை நம்பியே இருக்கிறது[11, 18].
ஆனால் கற்பிதங்களை மக்களிடம் பரப்புவதற்கோ, குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்கோ, அதைக்கொண்டு சமூகத்தை சீரமைப்பதற்கோ எந்த பெரிய பண்பாட்டு அமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. அரசியலும் பண்பாட்டு செயல்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. இவை இரண்டும் நடத்தப்படவேண்டும். இவ்வாறுதான் தேசியங்கள் வரலாற்றில் வெற்றி அடைகின்றன[19].
உலகிலுள்ள உயிர்கள் தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்தும் முதன்மையான உத்தி என்பது, மாறும் சூழலுக்குக்கேற்ப கற்று தன்னை மறுசீரமைத்துக் கொள்வதுதான். இதுதான் டார்வினின் அடிப்படைத் தத்துவம். இதுபோன்ற மறுசீரமைப்புகள் சமூகத்தில் ஒரு பெரிய இடரின் விளைவாகத் தோன்றுகின்றன. எந்த சமூகங்கள் இவ்வாறு மறுசீரமைக்கின்றனவோ, அவை சாதனைகளின் உச்சத்திற்குச் செல்கின்றன.
அவ்வாறு சீரமைக்க முடியாதவை அழிகின்றன. ஈழப்போரின் அழிவு தமிழ்ச்சமூகத்திற்கு ஒரு மறுசீரமைப்பிற்கு வழி வகுத்திருக்கிறது. அவ்வாறு செய்வதற்கான கற்பிதங்களையும் உருவாக்கித் தந்திருக்கிறது. அவற்றைக் கொண்டு மறுசீரமைப்பை நோக்கி செயல்படவேண்டியது அவசியமானது. இது ஓரிரு நாட்களில் நடப்பது அல்ல. கற்பிதங்கள் நிலைபெற்று சமூக மறுசீரமைப்பு நடைபெற ஓரிரு தலைமுறைகள் ஆகும். அவ்வாறு நீண்டகால நோக்கில் பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி செயல்படவேண்டும். அதுதான் நம்மை பலப்படுத்திக்கொள்ள இருப்பதிலேயே சிறந்த உத்தி.
ஈழப்போரில் தோல்வியுற்றோம் என்ற எண்ணத்தை நாம் நீக்கவேண்டும். ஈழத்தைவிட பெரிய வெற்றியாக வரலாற்றுக் கற்பிதங்களை ஈழப்போர் படைத்திருக்கிறது. அந்த உண்மையான வெற்றியைக் கொண்டாடவேண்டும். இதை நான் ஒரு உளவியல் காரணத்திற்கு மட்டுமல்ல, ஒரு வரலாற்று உண்மையாகவும் முன்வைக்கிறேன்.
பி.கு: நான் புலிகளிடமிருந்து வரலாற்றுக் கற்பிதங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவது, அவர்கள் செய்தது அனைத்தையும் சரி என்று நியாயப்படுத்துவது அல்ல. பல மோசமான பிழைகளும் நடந்திருக்கின்றன. நமது முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல பாடங்களையும் கற்பிதங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது கருத்து. உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் தவறுகள் நடந்துள்ளன.
அதற்காக அவர்களின் மாவீரர்களைத் தூற்றுவதில்லை. தவறுகளை ஏற்றுக்கொள்ளுவோம், மாவீரர்களைப் போற்றுவோம். நாம் எந்த கற்பிதங்களை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்பதை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு மட்டும்தான் உண்டு, அதை மற்றவர்கள் தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை