ஊரே வேடிக்கை பார்க்க...சாந்தனுகூட சண்டை போட்டு உருண்ட ஆனந்தி!

நடிகை ஆனந்தி திரைப் பயணத்தில் முக்கியமான திருப்பதை ஏற்படுத்திய படம்  என்றால் அது பரியேறும் பெருமாள். அப்படத்தையடுத்து சிறந்த திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. 
அந்த வகையில் தற்போது மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சாந்தனுவுடன் இணைந்து நடித்துவருகிறார். ராவணக் கோட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒரு பாடல் பரமக்குடியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. கோவில் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ள அப்படிப்பு தளத்தில் சுமார் 1000திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அத்தனை பேர் முன்பு சாந்தனுவும், ஆனந்தியும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, 'அந்த பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பாடலில் முதன்முறையாக நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் சண்டை போடுவது சுவாரஸ்யமாக உள்ளது' என்று கூறியுள்ளார்
anandhi
அதைத்தொடர்ந்து சாந்தனுவுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் பற்றி கேட்கப்பட்டது, 'சாந்தனு நடிப்பிலும் நடனத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர். இதற்கு முன் அவரைப் பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்' என்று கூறியுள்ளார். 
 

Powered by Blogger.