காரைக்குடியைச் சுற்றிவரும் எஸ்.கே16..!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.



பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுவந்த நிலையில் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நகைச்சுவை நடிகர்கள் சூரியும், யோகி பாபுவும் இணைந்து காமெடி செய்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாரதி ராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். வீர சமர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.


கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கிராமத்துப் பின்னணியில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் படக்குழு முதல் கட்டப் படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்துகிறது. தமிழ்த் திரையுலகில் எந்தப் பகுதியைச் சேர்ந்த படமாக இருந்தாலும் கிராமத்துப் பின்னணி என்றால் படக்குழுவினர் காரைக்குடிக்கு அருகில் உள்ள கிராமங்களிலேயே படப்பிடிப்பை மேற்கொள்கின்றனர். பழைய காலத்து வீடுகள் அதிகளவில் காணப்படும் அத்தகைய பகுதிகளில் வெளிப்புறக் காட்சிகளோடு வீடுகளின் உட்புறக் காட்சிகள் அதிகளவில் படமாக்கப்படுகின்றன.


பத்து நாள்கள் வரை நடைபெறும் இந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

நேற்று இயக்குநர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் படம் குறித்து, “உங்கள் தாத்தா,பாட்டி, அண்ணன்,தம்பி, அக்கா,தங்கை, சித்தப்பா,பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், அத்தைபையன்,அத்தைபொண்ணு, மாமன்பையன், மாமன்பொண்ணு இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண இன்று துவக்கம்” என்று பதிவிட்டிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.