தமிழரின் பாதுகாப்பை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும்?

இலங்கையில் மகிந்த,கோத்தாவின் நிகழ்ச்சி நிரலில் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதும் தமிழர்கள் எப்போது சோதினை என்ற போர்வையில் குறிவைக்கப்படுவதும் தமிழர்களே


இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பல தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தங்கள் குடும்பத்தை இழந்து நிர்கதியாய் நிற்கின்ற நிலையில்

 தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகள்,நெடுஞ்சாலைகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிங்களப் பகுதிகளில் சோதனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பகுதிகளிலேயே சோதனைக் கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கிலிருந்து புறப்படும் பஸ்களைப் பொறுத்தவரையில் பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை. அனுரதபுரத்திலும் இல்லை என்றும். வவுனியாவைத் தாண்டிய பின்னரே சோதனைகள் ஆரம்பமாகின்றதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்

Powered by Blogger.