பொலன்னறுவை தீப பூங்காவில் 5G தொடர்பாடல் கோபுரம்!!

எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனங்கள் இணைந்து 2,500 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது.


பொலன்னறுவை தீப பூங்காவில் அமைக்கப்பட்ட 5G தொடர்பாடல் கோபுரம் மற்றும் ஹபரன பொலன்னறுவை வீதியில் தற்போதுள்ள தொடர்பாடல் குறைபாடுகளை சரி செய்வதற்கான தொடர்பாடல் கோபுரத்தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பணிப்பாளர் குழாமினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.