யேர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய சப்பறத் திருவிழா!!📷

யேர்மனி வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மஹோற்சவத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.


அந்தவகையில், மஹோற்சவத்தின் 8 ஆம் நாள் திருவிழா (வெள்ளிக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த 8ஆம் திருவிழாவான வேட்டைத் திருவிழா, வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தின் முன்றலில் நடைபெற்றது.

இந்த விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், வேட்டைத் திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்டைத் திருவிழா: இதனை மிருகயாத்திரை: என்றும் அழைப்பர். இந்து சமயத்தில் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்து ஆகம நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. 

தேர்த்திருவிழா ஆரம்பமாவதை காட்டுவதாக மிருகயாத்திரை விழாவிற்கு எம் பெருமாளின் புறப்படாக இது அமைகிறது. இங்கு அழித்தல் முன்பு சில மிருகங்களுக்குள்ளே மனிதம் இருப்பதை அதன் செய்கைகளினால் அறியலாம். அதே போல் சில மனிதர்களுக்குள்ளே மிருக உணர்வுகள் நிறைந்திருப்பதனையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. 

அபூர்வமாக சில மனிதர்களுக்குள்ளே தெய்வீகம் அடங்கியிருப்பதை அவர்களின் எண்ணம், சொல், செயல்களின் மூலம் தெரிந்து கொள்ளுகின்றோம். அனைவருக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை இறைவன் வேட்டையாடி அனைவருக்குள்ளும் அன்பு, பண்பு ஆகியவற்றை  பெருக்கியருள்வதே  யேர்மனி  வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய  வேட்டைத்திருவிழாவாகும்.இந்த நிலையிலேயே இன்றைய தினம் மாலை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.