மெல்லப் பேசு..!!மின்னல் மலரே..!! இனிமையான தொடர்!!
மூசிப்பெய்யும் பனிக்குளிரில் வீசிச்செல்கிறது பெண்ணே!
உன் ஞாபக அலைகள்.
அது மாசி மாதம், சில்லென்ற பனித்துளி தன்னை ஓவியமாக்கிக் கொண்டிருந்தது. தகரத்தை ஊடுருவி பனியின் சிலிர்ப்பு உடலை பதம் பார்க்க ஊசி துளைப்பது போல தோலினுள் புகுந்தது குளிர். புரண்டு போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டான் வெற்றிமாறன். வீட்டின் கூரையை மூடி நின்ற மாமரத்தில் இருந்து, இலைகள் பனித்துளியை வீட்டுக் கூரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. எழுந்து கொள்ளமுடியாமல் உடலைக் கட்டிப்போட்டது பனிக்குளிர்.
டொட்.....டொட்....தகரத்தில் பனிவிழும் ஓசை ஒரு இசை போல ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்திற்கு அவனையறியாமலே விரல்களும் போர்வைக்குள் அசைந்து கொண்டிருந்தன.
நேரம் ஐந்தாதாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்துவது போல மெல்ல ஒலிக்க ஆரம்பித்தது அப்பாவின் வானொலி. அதிகாலை இசையில் மனம் மயங்க, அந்தக் குளிரிலும் அவனது உதடுகளில் மெல்லிய புன்னகை.
இனிமையான இசை என்றாலே அவனுக்கு கனிமொழியின் நினைவு வந்துவிடும். ஆம்! அவளும் ஒரு இனிமையான இசையைப் போன்றவள் தானே, எண்ணங்களே இனித்தது அவனுக்குள். அவன் தன்னை உணர காரணமான தேவதை அவள். அவன் மனசுக்குள் ஆராதிக்கும் தெய்வீகம் அவள்.
இனிமையான இசை என்றாலே அவனுக்கு கனிமொழியின் நினைவு வந்துவிடும். ஆம்! அவளும் ஒரு இனிமையான இசையைப் போன்றவள் தானே, எண்ணங்களே இனித்தது அவனுக்குள். அவன் தன்னை உணர காரணமான தேவதை அவள். அவன் மனசுக்குள் ஆராதிக்கும் தெய்வீகம் அவள்.
பல்கலை வாழ்க்கை, அடிதடி சண்டை, போராட்டம், படிப்பு என்று நண்பர்கள் பட்டாளத்துடன் அலைந்து கொண்டிருந்தவன் அவன். அந்த வாள் விழிகள் சொன்ன சேதியில் தான் அவன் மாறிப்போனான்.
பெண் என்பவள் பேரன்பு என்றும், புனிதம் என்றும் காட்டித் தந்தவள் அவள். அவளைப் பார்க்கும் போது அவனுக்குள் உண்டாகும் உணர்வு நிச்சயம் காதல் அல்ல, அது அதைவிட மேலானது என்றே அவனுக்குத் தோன்றும்.
பெண் என்பவள் பேரன்பு என்றும், புனிதம் என்றும் காட்டித் தந்தவள் அவள். அவளைப் பார்க்கும் போது அவனுக்குள் உண்டாகும் உணர்வு நிச்சயம் காதல் அல்ல, அது அதைவிட மேலானது என்றே அவனுக்குத் தோன்றும்.
சிறுவயதிலேயே தாயை இழந்தவன் அவன். தாயன்பை அவன் உணர்ந்தறியும் வயதில் அவன் தாய் அவனோடு இல்லை. தன் தாய் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என அவளைப் பார்த்தே அவன் உணர்வதுண்டு. அந்த அன்பை தினமும் அனுபவிக்கவேண்டும் என எண்ணுவதில் அவன் இப்போது சுயநலவாதிதான்.
அப்பாவின் வானொலியில் அவனுக்கே அவனுக்காய் ஒலிப்பது போல ஒலித்தது ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் பரிமளித்த அந்தப் பாடல்.
கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே…என் ஓருயிரே
வந்து சேர்ந்துவிடு என்னைச் சேரவிடு
இல்லை சாகவிடு
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே…என் ஓருயிரே
வந்து சேர்ந்துவிடு என்னைச் சேரவிடு
இல்லை சாகவிடு
சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ
கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல்வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ
என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே
ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல்வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ
என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதெங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுயநிலை என்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்
இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுயநிலை என்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்
கண்கள் தாண்டிப் போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இதுவரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே…
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இதுவரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே…
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை
என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர்த்திவலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே ஹே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே ஹே
சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ.......
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ.......
வானொலியோடு சேர்ந்து தானும் பாடினான் வெற்றி, அந்தப்பாடலும் கனத்திருந்த மனதை இன்னும் கனக்கச் செய்தது அவனுக்கு.
ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
கருத்துகள் இல்லை