எல்லைத் தூண் கட்டைகள் உடைத்து சேதமாக்கப்பட்டன!!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றின் எல்லைகளை வரையறுத்து போடப்பட்டிருந்த தூண் கட்டைகள் இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.


பொன்னாலை - மூளாய் வீதியில், ஆலயத்திற்கு முன் வீதிப் பக்கமாக இருந்த காணியைச் சுற்றிப் போடப்பட்ட தூண் கட்டைகளே உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த காணியைச் சுற்றி ஆலய பரிபாலன சபை தூண் கட்டைகளை நாட்டியிருந்தது. மறுநாள் புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபை வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboPowered by Blogger.