புளித்த மாவைவிட பூணூல் மதிப்பு மிக்கது?

ஈழத் தமிழரின் உயிரைவிட புளித்த மா ஜெயமோகனுக்கு உயர்வானது. புளித்த மாவைவிட ஜெயமோகனின் பூணூல் தமிழக பொலிசாருக்கு உயர்வானது.

ஆனாலும் வலி என்றால் என்னவென்று ஜெயமோகனுக்கு புரியவைத்த மாக் கடைகாரருக்கு எமது நன்றிகளும் பாராட்டுகளும்.

ஈழத் தமிழர் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஜெயமோகன் இனி நன்கு புரிந்து கொள்வார் என்று நம்புவோமாக.

கேவலம் புளித்த மாவுக்காக அடி வாங்கியவுடன் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறார். இரவோடு இரவாக அடித்தவரை கைது செய்விக்கிறார்.

இனியாவது ஆயிரக்கணக்கில் பலியான ஈழத் தமிழர்களின் உயிர்களை கொச்சைப்படுத்தாமல் அவர் இருக்க வேண்டும்.

இலக்கிய ஜாம்பவான் என்ற திமிரில் ஈழத் தமிழர்களின் உணர்வுகளுடன் சேட்டை விடக்கூடாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.