கூன் விழுந்த தேசம்.!!
அதிக பிரசங்கிகளின்
அவசரத்தில்
அகிலமே அசைவது போன்று
அகத்தினை கூறு போட
முனைகிறது
காலம்!
ஓலங்கள் ஒப்பாரி வைத்து
ஒரு பக்கத்தில்
பக்கவாதத்தில்
படுத்துறங்குகிறது!
நியாயங்கள் முக்கால்
நாற்காலி தேடி
நாற்திசையையும்
அழைக்கிறது!
நானே ராசா நானே மந்திரி
எனும் குறுநில மன்னராய்
அரச சபையில் ஆலாபனை
அழகாக நடக்கிறது!
வீணாய் குரைக்கும் வீதிநாய்போல்
விரயமாய் போகிறது
அதிகார மையங்களில்
மைபூசிய முகங்கள்!
வான் முட்டிய சாதனைகளும்
தேள் கொட்டிய வேதனைகளும்
நானெனும் அகங்காரத்தின்
சக்கரத்தில் நசுங்கி மூச்சுத்திணறி
துடிக்கிறது!
மனிதம் கூவி விற்கும்
வியாபாரிகளின்
கணித சாத்திரத்தில்
காலக் கணக்கு
பிழைக்கிறது!
முகமூடிக்குள் விகாரமாய்
மறைந்து கிடக்கும்
மர்மமனிதர்களின்
அதர்மத்துக்குள் அடிமைப்பட்டு
தவிக்கிறது
ஒருமைப்பாடு!
ஊசி முனையில்
உயிர் தப்பியும்
பாசி மனிதரின்
பாவப் பார்வைக்குள்
கூன் விழுந்து கிடக்கிறது
தேசம்!
✍தூயவன்
அவசரத்தில்
அகிலமே அசைவது போன்று
அகத்தினை கூறு போட
முனைகிறது
காலம்!
ஓலங்கள் ஒப்பாரி வைத்து
ஒரு பக்கத்தில்
பக்கவாதத்தில்
படுத்துறங்குகிறது!
நியாயங்கள் முக்கால்
நாற்காலி தேடி
நாற்திசையையும்
அழைக்கிறது!
நானே ராசா நானே மந்திரி
எனும் குறுநில மன்னராய்
அரச சபையில் ஆலாபனை
அழகாக நடக்கிறது!
வீணாய் குரைக்கும் வீதிநாய்போல்
விரயமாய் போகிறது
அதிகார மையங்களில்
மைபூசிய முகங்கள்!
வான் முட்டிய சாதனைகளும்
தேள் கொட்டிய வேதனைகளும்
நானெனும் அகங்காரத்தின்
சக்கரத்தில் நசுங்கி மூச்சுத்திணறி
துடிக்கிறது!
மனிதம் கூவி விற்கும்
வியாபாரிகளின்
கணித சாத்திரத்தில்
காலக் கணக்கு
பிழைக்கிறது!
முகமூடிக்குள் விகாரமாய்
மறைந்து கிடக்கும்
மர்மமனிதர்களின்
அதர்மத்துக்குள் அடிமைப்பட்டு
தவிக்கிறது
ஒருமைப்பாடு!
ஊசி முனையில்
உயிர் தப்பியும்
பாசி மனிதரின்
பாவப் பார்வைக்குள்
கூன் விழுந்து கிடக்கிறது
தேசம்!
✍தூயவன்
கருத்துகள் இல்லை