அத்துரலிய ரத்ன தேரர் கல்முனைக்குள் நுழைந்தார்.!!

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் பல தரப்பும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்று அத்துரலிய ரத்ன தேரரும் போராட்ட இடத்திற்கு வந்துள்ளார். மஞசள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, பெரு வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரனும் உடன் வந்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
Powered by Blogger.