வட வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்!!

வட வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய பொதுக்கூட்டமும் ஆலய பரிபாலன சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் நாளை 24.06.2019 திங்கட்கிழமை பி.ப. 3 மணியளவில் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

வழிபடுவோர் சபையினரும், திருவிழா உபயகாரர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப் பொதுக்கூட்டம் அனைத்து உபயகாரர்கள், கோயிலின் சொத்துக்களை உடைமையில் வைத்திருப்போர், கிராமசேவகர், பிரதேச செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுனர், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து கலாசார அமைச்சு ஆகியவற்றுக்கு முறைப்படி அறிவித்து அவர்களது / அவர்களது பிரதிநிதிகளது பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் கோரும் தொடர் சத்தியாக்கிரகத்தின் 28 ஆவது நாளில் இடம்பெறவுள்ள இப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள், திருவிழா உபயகாரர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.