தெலுங்கில் கால் பதித்த பிரியா வாரியர்!!

மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார். ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அப்படம் தோல்வியடைந்ததால் பிரியா வாரியர் தனது அடுத்த படத்தின் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். அறிமுக இயக்குநர் ரகு கோவி இயக்கும் கன்னடத் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ள பிரியா, வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் கவனமாக கதைகளை கேட்டு வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் கன்னடப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கு படத்தில் நடிக்கவிருந்த பிரியா வாரியர் அதன் திரைக்கதை பிடிக்கவில்லை என்பதால் அதை தவிர்த்துள்ளார். இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நித்தின் குமார் ரெட்டியின் புதிய படத்தில் பிரியா வாரியர் இணைந்துள்ளார். பிரபல இயக்குநரான சந்திர சேகர யீலெட்டி இயக்கும் புதிய படத்தில் என்ஜிகே நாயகி ரகுல் பிரீத் சிங்குடன் இணைந்து மற்றொரு நாயகியாக நடிக்கவுள்ளார் பிரியா. பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று(ஜூன் 23) ஹைதரபாத்தில் பூஜையுடன் தொடங்கியது பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு. பவ்யா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. ஆனந்த் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்.

No comments

Powered by Blogger.