G20 மாநாடு இன்று ஜப்பானில் ஆரம்பம்!

G20 மாநாடு இன்று(வெள்ளிக்கிழமை) ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமாகவுள்ளது.


சில நாடுகளுக்கிடையிலான வர்த்தகப்போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, G20 மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே பல நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

சீன ஜனாதிபதி ஷி சின்பிங்கும், ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபேயும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும், சர்வதேச தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள G20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.