தமிழ் மண்ணில் இன்னமும் சமுர்த்தி மூலமான அரசியல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை??

அன்று ஒருவர் தலைமையில் இதே போல் மேடைபோட்டு வரிசையில் நின்று சமுர்த்தி அரசியல் அரங்கேறினர் மட்டுமல்ல ஆரம்பித்தும் வைத்தனர்இன்று வேறு ஒருவர் தலைமையில் அதே போல் மேடை போட்டு வேறு நபர்கள் வரிசையில் நிற்க சமுர்த்தி அரசியல் தொடர்கின்றது.
ஒரே ஒரு வித்தியாசம் மேடையில் வரிசையில் நின்றவர்கள் தான்
ஒரே ஒரு ஆச்சரியம் : அன்று மேடை போட்டு வரிசையில் நின்று சமுர்த்தி அரசியல் முன்னெடுத்த போது அதை விமர்சித்தவர்கள் இன்று அதே போல மேடை போட்டு அவர்களும் வரிசையில் நிற்பது
ஒன்றை விமர்சனம் செய்தால் அந்த நடைமுறை பிழை என்று வர்ணித்தால் அதை அந்த விமர்சனத்தையே முன்வைத்தவர்கள் அதே போல் செய்வது சரியானதா?

காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆனால் செயற்பாடு ஒன்றுதான்.

No comments

Powered by Blogger.