தமிழ் அரசியல் வாதிகளிடம் மூளை சுருங்கி உள்ளிழுத்துக் கொண்டு memory lost !!

தமிழர்களில் ஒரு தொகுதியினருக்கு மூளையின் அளவு சற்று வீங்கிக் காணப்படும்.
சில நேரங்களில் மண்டைக்குள் இடம் கொள்ளாது அது காது வழியாக வழிவதும் உண்டு.

அப்படி வீங்கிப் போன ஒரு தருணத்தில் உதிர்த்த பொன்மொழிகளில் ஒன்றுதான் 1983 இல் புலிகள் யாழ் திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்திருக்காவிட்டால் கறுப்பு யூலை படுகொலைகள் / வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் நடந்திருக்காது என்ற வாதம்.
மூளை வீங்கினால் அதன் பக்க விளைவாக memory lost வரும். அதனால்தான் கறுப்பு யூலைக்கு இரு வருடங்களுக்கு முன்பே யாழ் பொது நூலகத்தையும் தீயிட்டு கொளுத்தி/ தமிழர் உரிமைகளை பேசிய ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையும் கொளுத்தி/ தமிழர்களுக்கு என்று இருந்த ஒரு சிறிய அரசியல் அலகான மாநகர சபைக் கட்டிடத்தையும் இன அழிப்புப் படைகள் எரித்தார்கள்.
இது ஒரு இன அழிப்பு என்பதற்கு இந்த மூன்று எரிப்பு சம்பவங்களும் அன்றைய சாட்சியங்கள்.
அதன் பின்பே புலிகள் இன அழிப்புப் படைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப் படுத்தினார்கள்.
ஆனால் இந்த மூளை வீங்கியவர்கள் தமது memory lost இன் காரணமாக இவற்றை மறந்து தொலைத்து விடுகிறார்கள்.
மூளை வீங்கிப் பரிதாபங்கள்.
இப்படித்தான் 2009 இல் புலிகள் கடைசி நேரத்தில் மக்களை விடுவித்திருக்கலாம் என்று பிதற்றிக் கொண்டு திரிகிறார்கள்.
படைத்துறை அறிவும் இல்லை/ நிலம் சார்ந்த புவியியல் அறிவும் இல்லை/ இன அழிப்பு அரசின் மூலோபாய சிந்தனை குறித்த வரலாற்றுப் புரிதலும் இல்லை.
இருந்திருந்தால் இப்படி உளறித் திரிய மாட்டார்கள்.
'புலிகள் ஆயுதத்தை மவுனித்த பின்புதான் சிறைப் பிடிக்கப்பட்ட மக்களும் / போராளிகளுமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே?' என்று இவர்களிடம் கேட்டால் உடனே மூளை சுருங்கி உள்ளிழுத்துக் கொண்டு memory lost க்குள் ஆட்பட்டு விடுவார்கள்.
எதிரிகளை விட மோசமான விச ஜந்துக்கள் இவர்கள்தான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.