தயாரானது பாண்டவர் அணி!

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. நடிகர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கங்களுக்கும் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கடந்த முறை பொறுப்பேற்ற பின் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். விஷால் ஒருபடி மேலே போய் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தான் தனது திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய் ரத்னா, பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.