சந்தானத்தின் ஏ1: தொடங்கியது பிசினஸ்!

சந்தானம் நடிக்கும் ஏ1 திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதன் வியாபாரமும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காமெடி நடிகராக இருந்து கதாநாயகர்களாக வலம்வரும் நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களுக்குப் பின் மீண்டும் காமெடி ரூட்டுக்குத் திரும்பிவிடுவதே இதுவரை நடைபெற்றுவந்தது. ஆனால், சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அதை மாற்றிவருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகின்றன. நாளைய இயக்குநர் சீசன் 2வில் வெற்றி பெற்ற ஜான்சன் ஏ1 படத்தை இயக்குகிறார். தாரா அலிசா பெர்ரி கதாநாயகியாக நடிக்க, மொட்ட ராஜேந்தர், சாய் குமார், சாமிநாதன், மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் 4.6 கோடி ரூபாய்க்குப் பெற்றுள்ளது. சர்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான்பால் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் வியாபாரப் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments

Powered by Blogger.