இந்தியாவில் முதலீடு செய்வதில் பெண்களின் நிலை!!

இந்தியாவில் முதலீடு செய்யும் முடிவுகள் மேற்கொள்வதில் மிகக் குறைந்த அளவு பெண்கள்தான் சுயமாக முடிவெடுப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.


டி.எஸ்.பி. வின்வெஸ்டார் பல்ஸ் 2019 ஆய்வின் படி, இந்தியாவில் முதலீட்டுத் துறையில் இயங்கும் பெண்களில் 33 சதவிகிதத்தினர் மட்டுமே சுயமாக முடிவெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆண்களைப் பொறுத்தவரையில் 64 சதவிகிதத்தினர் சுயமாக முடிவெடுப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. சுயமாக முடிவெடுக்கும் பெண் முதலீட்டாளர்கள் தங்களது கணவன் மற்றும் பெற்றோர்களின் ஆதரவால் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். 13 சதவிகிதப் பெண்கள் தங்களது கணவனின் இறப்பு அல்லது விவாகரத்து காரணமாக முதலீடு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதாவது வெறும் 30 சதவிகிதப் பெண்கள் மட்டுமே யாருடைய தூண்டுதலும், வற்புறுத்தலும் இல்லாமல் சுயமாக முதலீடு செய்பவர்களாக இருக்கின்றனர். முதலீடு செய்யும் ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ தங்களது குழந்தைகளின் கல்வி, கனவு இல்லம், பிள்ளைகளின் திருமணம், கடனில்லா வாழ்க்கை ஆகியவைதான் இலக்காக இருக்கின்றன. வீடு மற்றும் கார் வாங்குவதில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தங்கம், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.