யேர்மனி பேர்லின் மாநகரத்தில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் முகமாக நடாத்திய கலை மாருதம் 2019!!📷

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி பேர்லின் மாநகரத்தில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் முகமாக நடாத்திய கலை மாருதம் 2019 நிகழ்ச்சியின் நிழற்பட தொகுப்பு இன்று வெளியிட்டனர்.


ஈராயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே நாவலந்தீவில் இருந்து இமயம்வரை  வென்று  புலிக்கொடி  நாட்டினான் சேரன்  செங்குட்டுவன் எனும் வீரத்தமிழ் மன்னன் .அவன் கற்பின் தெய்வம்  கண்ணகிக்கு  இமயத்தில் இருந்து கல் எடுத்து கோவில் கட்டநினைத்தான்  . இதனை அறிந்த ஆரிய  அரசன் கனகவிசயன்  தமிழையும்   தமிழ் அரசர்களையும்  இழிவாக பேசியதை அறிந்த  சேரன் போரிலே  கனகவிசயனை  வென்று  அவன் தலையிலேயே  கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினான்  என்பது வரலாறு . இவ்வரலாற்றை  எங்கள் பெர்லின்  மண்ணில் திருமதி பாமினி துஷ்யந்தன் அவர்களின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு  முதன் முறையாக  எங்கள் கலைஞர்களுடன்  மேடை நாடகமாக அரங்கேற்றியதன் கலை வெளிப்படுத்தும் நிழல்கள் சில தொகுப்பு ஆகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.