முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம்!!📷

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .


இன்றுடன் 846ஆவது நாளாக  தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்ட்டது . முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது .

இன்னும் சில நாட்களில் ஐநா மனிதவுரிமைகள் சபையின் இவ்வாண்டுக்கான 2ஆவது அமர்வு நடைபெறவுள்ள நிலையில் தமது போராட்டத்துக்கான நீதியை கோரும் வகையிலும் 846அவது நாட்களாக வீதியில் நீதிகேட்டு போராடும் தம்மை இலங்கை அரசு கைவிட்டுவிட்டதை ஞாபகம் ஊட்டும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யபட்டு நடாத்தபட்டதாக காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர் .

 இன்னும் சில நாட்களில் ஐநாவில் நடைபெறும் அமர்வில் தம்மை பிரதிநிதுதுவ படுத்தி செல்பவர்களும் ஏனைய புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மனிதவுரிமைகள் அமைப்பினரும் தமக்கான் நீதியை விரைந்து பெற்று கொள்வதற்கு குரல் கொடுக்கவேண்டும் எனவும் இலங்கை அரசின் இரட்டை வேடத்தை ஐநாவில் எடுத்துரைக்கவேண்டும் எனவும் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் " எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே , எமது உறவுகளுக்கு என்ன நடந்தது , கையளிக்கபட்ட உறவுகள் எங்கே , பிள்ளைகளை தேடியே இறந்துகொண்டிருக்கும் பெற்றோருக்கு  பதில் என்ன?, தமிழர்கள் எங்களிடம் மட்டும் ஏன் இந்த பாராமுகம் ?, பத்து  வருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும் ? சர்வதேசமே எமக்கு நீதியை பெற்று தா ,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை  தாங்கியபடி போரட்டத்தில் ஈடுபட்டனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.