முன்னணி வரதராஜன் பார்திபன் மீது கொலை அச்சுறுத்தல்!!!

நேற்றுக் (13.06.2019) காலை 9.30 மணியளவில் தொலைபேசித் தொடர்பெடுத்த இனந்தெரியாத நபர் ஒருவர், நீங்கள் தான் பார்த்திபனா? நாயன்மார்கட்டு பிரச்சனை தொடர்பாக பேஸ்புக்கில் என்ன பதிவு இட்டீர்கள் . நீதிமன்றில் வழக்கு போட போகின்றேன். நேர வந்து சந்திக்கின்றேன் என்று கூறி தொலைபேசி அணைப்பை துண்டித்து விட்டார்.


கடந்த சபை அமர்வில் கம்பரலியா திட்டத்தில் பணம்வாங்கியது தொடர்பாக சபையில் நடைபெற்ற விவாதங்களை நான் முகப்புப் பக்கத்தில் பதிவேற்றியிருந்தேன். அங்கு கௌரவ உறுப்பினர்கள் பேசிய நடந்த விடயத்தை எந்த கற்பனையும் இல்லாமல் உள்ள படி அவ்வாறே தெரிவித்திருந்தேன். ஆக அது தொடர்பில் வழக்கு போடப்போக்கின்றோம்  என்றால் அதன் அர்த்தம் என்ன?  தாங்கள் சபையில் தெரிவித்த கருத்து பொதுவெளியில் வந்து விட்டது என்ற காரணம் தானே?

தாரளமாக வழக்கு போடுங்கள்  எனக்கு தொலைபேசி எடுத்து சொல்லிட்டு வழக்குப் போடத்தேவையில்லை நீங்கள் வழங்கு போட்டால் நீதிமன்றால் எனக்கு கட்டளை அனுப்பப்படும் அதன்படி நான் நீதிமன்றுக்கு செல்வேன். நீங்கள் கூறியவற்றுக்காக நீங்கள் செய்த பிழையை வெளிக்கொண்டுவந்தற்காக எம் மீது வழங்குப்போடுகின்ற அதிசயம் எனிதான் நிகழப்போகுது.

நாயன்மார்கட்டு பிரதேச வட்டார கௌரவ உறுப்பினர் அன்று அவரது வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவத்தை சபையில் கொண்டு வந்தது தொடர்பாக என்னையும் தனுஜனையும் உங்களுக்கு கடவுள் தண்டனை தருவார் என்று திட்டீனார். இன்று அந்த நாயன்மார்கட்டு பிரச்சனை தொடர்பாக இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் வழக்கு போடுவேன் என்று அச்சுறுத்துகின்றார். இதுவா கடவுள் தண்டனை வருவார் என்று அன்று எங்களுக்கு கூறியதன் அர்த்தம்.

தொலைபேசி எடுத்து வழக்குப்போடப்போகின்றேன் என்று கூறினால் அதற்கு பேர் அச்சுறுத்தல். எனவே தொலைபேசி அழைப்பு எடுக்காமல் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்.  ஏன்எனில் உலகில் தலை சிறந்த சொல் செயல் . அத்துடன் வழக்கு போடுவது ஒன்றும் உங்களுக்கு புதுமையான விடயம் அல்ல தானே அது போல் வழக்குகளை எதிர்கொள்வதும் எமக்கு புதிய விடயமல்ல.

நான் தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு எனது இலட்சியத்தை மாற்றிக் கொள்பவன் அல்ல அன்று இட்ட அதே பதிவை நீங்கள் வழங்குப் போடப்போகின்றோம் என்று கூறிய பதிவினை மீண்டும் பதிவிடுகின்றேன்.
=============================================

கம்பரலியா திட்டத்திற்காக பயனாளிகளிடம் இருந்து பணம் பெறப்பட்டதா என்பது பற்றி ஒரு கருத்தாடல் நடைபெறுகின்றது இது பற்றி நேற்று ( 07.06.2019) அன்று யாழ்.மாநகர சபை அமர்வின் போது நடந்ததைப் பதிவு செய்ய நானும் விரும்புகின்றேன்.
நான் கூறிகின்ற இவ் விடயம் நேற்று சபை அமர்வின் போது நடைபெறவில்லை என்று யாரும் மறுத்து உரைக்கட்டும் பார்க்கலாம்

காசு வாங்கப்பட்டது தொடர்பான பிரச்சனை நேற்று யாழ்.மாநகர சபை அமர்வின் போதும் எதிரொலித்தது. அப்போது ஐந்தாம் வட்டரா கௌரவ உறுப்பினர் மதிவதனி தனது வட்டாரத்தில் அவ்வாறு காசு வாங்கவில்லை என்று கூறினார். அப்போது நானும் சக உறுப்பினர் தனுஜனும் எங்களிடம் உங்களுடைய வட்டராத்தில் காசு வாங்கினது தொடர்பான ஒலிப்பதிவு உள்ளது அதனை இதில் போட்டுக் காட்டவா என்று கேட்டோம் அப்போது கௌரவ முதல்வர் இங்கு எதுவும் போட்டுக் காட்டவேண்டாம் வெளியில் அதை போட்டுக் காட்டு மாறு கூறினார். அத்துடன் சபை தேனீர் இடைவெளிக்காக நிறுத்தப்பட்டது.

அவ் தேனீர் இடைவெளியின் போது அப்போது குறித்த 5ஆம் வட்டரார கௌரவ உறுப்பினர் மதிவதனி அவர்கள் என்னிடம் வந்து என்ன ஆதாரம் இருக்கின்றது அதனை எனக்குப் போட்டுக் காட்டுமாறு கூறினார் அதற்கு நான் இங்கு வைத்து போட்டுக் காட்ட நான் தயார் இல்லை சபை தொடங்கட்டும் சபையில் நான் போட்டுக் காட்டுகின்றேன். நீங்கள் சபையில் அது குறித்து கருத்து தெரிவியுங்கள் என்று கூறினேன் அதற்கு உறுப்பினர் என்னையும் தனுஜனையும் பார்த்து உங்கள் இருவருக்கும் கடவுள் நிச்சயம் தண்டனை தருவார் என்று கூறிவிட்டு சென்று விட்டார்

மீண்டும் சபை தொடங்கியது வேறு ஒரு விடயம் பற்றி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவ் விவாதத்தில் காசு வாங்கவில்லi வாங்கவில்லi என்று மறுத்து வந்தவர்கள் தங்களை அறியாமல் காசு வாங்குவதை ஒப்புக்கொண்டார்கள். அங்கு கருத்து தெரிவித்த கௌரவ உறுப்பினர் தர்சானந் காசு வாங்கப்பட்டது உண்மை அது எல்லோருக்கும் தெரியும் எனது வட்டாரத்தில் காசு வாங்கப்படவில்லை நான் காசு வாங்கவும் இல்லை நான் காசு வாங்கியது பற்றி விசாரிக்கவே சென்றேன் என்று அதிர்ச்சி தந்தார். அப்போது தனுஜன் எழுந்து காசு வாங்கப்பட்டது உண்மைதானே என்று கேட்ட போது காசு வாங்கியது உண்மை அது எல்லோருக்கும் தெரியும் என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார். அப்போது எழுந்த 5 ஆம் வட்டரா கௌரவ உறுப்பினர் மதிவதனி வீதியில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு சாப்பாடு கொடுக்கவே காசு வாங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதுவே நடந்தது இதில் இருந்து காசு வாங்கப்பட்டதா இல்லையா என்ற கருத்தாடலுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்
Powered by Blogger.