கூட்டமைப்பும் தேர்தலுக்கு எதிரா ?

நாம் இப்பத்தியில் ஏனவே பல தடவைகள் சுட்டிக்காட்டிய படி மாகாணசபைத்தேர்தல்கள் வேண்டுமென்றே நடத்தப் படாமல் இழுத்தடித்துக் கொண்டு செல்லப்படுகின்றது .
பெரும்பாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப் பேச்சுக்கு - பகட்டுக்கு மாகாணசபைகள் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று பேசிக் கொண்டு , உள்ளூற அதற்காக எந்தக் காய் நகர்த்தலையும் செய்யாமல் இருக்கின்றன என்பதுதான் அப்பட்டமான உண்மை .

இதுவிடயத்தில் மக்களின் வாக்குரிமைவிவகாரத்தில் - அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கின்றன என்பதே யதார்த்தமாகும் .
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போடு வது மக்களின் இறைமையை மீறும் செயல் என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகவும் , தெளிவாகவும் தீர்ப்பு எழுதிய பின்னரும் , மக்களின் இறைமையை மீறும் அந்தச் செய லைத்தான் அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது .
அரசுக்கு முண்டு கொடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு போன்ற கட்சிகளும் அதனையே மேற்கொண்டு வரு கின்றன என்பதுதான் நிதர்சனமான நிலைப்பாடாகும் .
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத்தேர் தலை எதிர்கொண்டு அதன் மூலம் மக்கள் ஆதரவுத்தளம் தொடர்பான தங்களின் பொட்டுக்கேடு வெளி வெளியாகி விட்டால் , ஜனாதிபதித்தேர்தலில் தமது தரப்பு வெல்வதற்குக் கிஞ்சித்தும் இருக்கக் கூடிய வாய்ப்புக் கூட முழுமையாக அடிபட்டுப் போய்விடும் என்று ஆளும் ஐக்கிய தேசிய முன் னணி அரசு அஞ்சுகின்றது .
அதனால் மாகாண சபைத் தேர்தலை பிள்ளையார் கலி யாணம்போல நாளைக்கு , நாளைக்கு என்று இழுத்தடித்து வருகின்றது அது .
இப்படி ஆளும் தரப்பு , மாகாணசபைத் தேர்தலை நடத்து வதற்கு திராணியற்று , அஞ்சி , அதற்கான முன்முயற்சி எத னையும் எடுக்காமல் வேண்டுமென்றே தள்ளிப்போட்டுக் கொண்டு வருகின்றது என்று தெரிந்தும் - புரிந்தும் - அதற் கும் சேர்த்து ஆதரவளித்து வருகின்றது கூட்டமைப்பு .
" மக்களின் வாக்களிக்கும் உரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக் கூடாது . மிக விரைவில் இந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் . " - என்ற சாரப்பட , ஓப் புக்குச் சப்பாணிபோல நாடாளுமன்றத்தில் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் பேசியமையோடு சரி , அதற்கு மேல் இந்தத் தேர்தலை நடத்திக் கொள்வதற்கு ஒரு துரும்பைத் தன்னும் அவரும் அவரது கூட்டமைப்புக் கட்சியினரும் அசைத்தார்கள் என்பதற் ுச் சான்று ஏதும் இல்லை ,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசே உயிர் பிழைத்து நிற்கின் றது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை . )
அந்த வலிமையை வைத்து எத்தனையோ விடயங்க ளைப்பேரம்பேசி பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கூட்டமைப் புக்கு உண்டு .
அவை எவற்றையும் செய்யாமல் வெறுமனே தொகு திக்கு முப்பது கோடி ரூபா ' கம்பெரலிய திட்டத்துக்குப் பின் னால் அலைந்து கொண்டிருக்கின்றது அக்கட்சி ,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் , ஜனாதி பதிசட்டத்தரணியுமான எம் . ஏ . சுமந்திரன் கூறியபடி முன்னர் நடைமுறையில் இருந்த மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை மீள நடைமுறைக்குக் கொண்டு வருதல் என்ற ஒரு வரித் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும் பான்மையுடன் நிறைவேற்றினாலே போதும் , அடுத்த மூன்று மாதத்துக்குள் நாடு முழுவதிலும் மொத்தம் ஒன்பது மாகா ணங்களில் எட்டில் நிலுவையாக இருக்கும் மாகாணசபைத் தேர்தலை நடத்தி முடித்து விடமுடியும் .
ஆனால் , அப்படி ஒரு பிரேரணையைக் கொண்டு வரச் செய்து , அதை நிறைவேற்றி , மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வைக்கும் அழுத்தத்தைக் கூட்டமைப் புத் தலைமை முன்னெடுக்காமலேயே இருக்கின்றது .
அதனை நோக்கும்போது , உடனடியாக மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் விருப்பம் கூட்டமைப்புக்கு இல்லை என்றோ அல்லது அத்தேர்தலை இன்றையகட்டத் தில் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து கூட்டமைப்புக்கும் கூட அச்சமோ என்றுதான் எண் ணத் தோன்றுகின்றது .
ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர் தல்வரை பொறுத்திருந்து , அதன்பின்னர் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வது என்ற ஏற்பாடு கூட்டமைப்புக்கும் கூட ஆபத்தானதாக மாறக் கூடும் .
நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தெரிவில் எதிர்பாராத மாற்றம் நேருமாயின் அதற்குப் பின்னர் வடக்கு , கிழக்கில் நடக்கக்கூடிய மாகாணசபைத்தேர்தல்களிலும் கூட்டமைப் புக்கு - குறிப்பாகத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு - அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை தந்து விடலாம் .
ஆகவே , கூட்டமைப்பு இப்போதே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது நல்லது.
நன்றி காலைக்கதிா். 22.06.2019

No comments

Powered by Blogger.