யாழ்.மாநகர சபை முதல்வரிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை!!

ஊடக அறிக்கை
19.06.2019

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தற்போது பூட்டப்பட்டு வருகின்ற ளுஅயசவ Pழடட தொடர்பில் எழுந்துள்ள பின்வரும் பிரச்சனைகள்  தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொதுக்கூட்டத்தினை உடனடியாக ஒழுங்குபடுத்தித்தருமாறு யாழ்.மாநகர சபை முதல்வரிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர்களாகிய நாங்கள் கோரியுள்ளோம்.

1. தற்போது Smart Lamp Poles பூட்டப்படுகின்ற இடங்களில் மக்கள் தமது பலத்த எதிர்பை வெளிகாட்டி வருகின்றனர். உதாரணமாக நல்லூர் செட்டித்தெருவில் குறித்த இடத்தில் அதனை பூட்டுவதற்கும் மிக கடுமையான எதிர்பை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவே இது பற்றி விவாதித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். ஏன்என்றால் அபிவிருத்தி என்பது மக்களின் விருப்பப்படி மக்களின் பங்களிப்புடன் நடைபெற வேண்டியது.

2. Smart Lamp Poles தொடர்பாக சபையில் நடைபெற்ற  விவாதங்களின் போது Smart Lamp Poles பூட்டப்பட இருக்கின்ற 18 இடங்களையும் சபையில் தெரிவித்து அதற்கான அனுமதியினை சபையில் பெற்று அதன்பிறகே பொருத்துமாறு கூறியிருந்தோம் ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

3. Smart Lamp Poles க்குரிய நிறுவனத்திற்கும் யாழ்.மாநகர சபைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் நான்காவது பந்தியில் மேற்படி Smart Lamp Poles களில் சிறிய ரக செலுனர் அன்ரனாக்கள் பூட்டப்படும் என்று உள்ளது. இந்த அன்ரனாக்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கை ஆகியவற்றையும் சபையில் கோரியிருந்தோம் ஆனால் அதுவும் எங்களுக்கு தரப்படாமலேயே Smart Lamp Poles அமைக்கத் தொடங்கப்பட்டு விட்டது

4. மேற்படி Smart Lamp Poles களில் கமராக்கள் பூட்டப்படுகின்றன. அது மிகவும் அத்தியாவசியமான விடயம் ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற Smart Lamp Poles கள் சன நெருக்கடியான குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைக்கப்படுகின்றன. 20 மீற்றர் உயரத்திற்கு அமைக்கப்படுகின்ற இவ் Smart Lamp Poles களில் பூட்டப்படும் கமராக்களின்  மூலம் குடியிருப்புக்களில் வாழ்கின்ற மக்களின்  இயல்புவாழ்கை பாதிப்படையும்

எனவே மேற்படி காரணங்கள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பது தொடர்பிலும் மற்றும் மக்கள் ளுஅயசவ Pழடட அமைக்கும் இடங்கள் தொடர்பில் பலத்த ஆட்சேபனைகளை தெரிவித்து வருவதனாலும்  உடனடியாக  விசேட பொதுக்;கூட்டத்தினை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் அதே நேரம் அவ்வாறு விசேட பொதுகூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்த முடியாது விடில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற மாதாந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறும் அது வரைக்கும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தற்போது அமைக்கப்பட்டு வரும் Smart Lamp Poles கள் அமைப்பதனை நிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும் கௌரவ முதல்வர் அவர்களிடம் கோரிக்கை விட்டுள்ளோம்.

விசேட பொதுக்கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்துவது மற்றும் சபையில் மேற்கூறப்பட்ட விடயப்பரப்புக்கள் விவாதிக்கப்பட்டு மக்கள் நலம்சார்ந்து மக்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் அனுமதியுடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக முடிவு எட்டும் வரை குறித்த திட்டத்தை நிறுத்திவைப்பதற்குரிய கடிதம் இன்று யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் மாநகர சபைகளில் மூவர் அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கையப்பமிட்டு எழுத்து மூலமான கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது மாநகர சபையின் முதல்வர் விசேட பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும். இது சட்டரீதியான தேவைப்படாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.