சைனீஸ் உணவு பிரியரா நீங்கள்?

பொதுவாகவே சீனத்தயாரிப்பு என்றால்,விலை தரம் இரண்டுமே சீப்பாகத்தான் இருக்கும் என்று உலகம் நினைக்கிறது.இது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் சீனர்கள் உலகத்துக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் உணவுப் பண்டங்களைப் பற்றி வருகிற செய்திகள் அனைத்துமே அக்மார்க் அதிர்ச்சி ரகம்!

poorn
அமெரிக்கர்களை அலற வைத்த இறால்
ஏற்கனவே பிளாஸ்டிக் அரிசி,பிளாஸ்டிக் முட்டை என்று இந்தியர்கள் அலறிக்கொண்டு இருக்க, அமெரிக்கர்கள் சீன இறால்களைப் பார்த்து மிரண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா முழுவதுமிருந்து முப்பது வெவ்வேறு சூப்பர் மார்க்கெட்களில் வாங்கப்பட்ட இறால்களை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் இறால்களுக்கு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ginger
இஞ்சி லிவருக்கு நல்லதல்ல
அல்டிகார்ப் என்பது ஒரு பூச்சிக்கொல்லி மருந்து.உலகெங்கும் தடை செய்யப்படு விட்டது.குறிப்பாக இஞ்சிக்கு இதைத் தெளித்தால் , இஞ்சி இதை உறிஞ்சிக் கொண்டு விடும்.கழுவினாலும் போகாது.இப்படிப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை தேவைக்கு ஆறுமடங்கு கூடுதலக சீனர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த அல்டிகார்ப் மனிதனின் ஈரலை காலி செய்துவிடும் என்பது குறிப்பிட்ட வேண்டிய தகவல்.
ginseng
சீனத்து வயகராவிலும் விவகாரம்
ஜின்செங் எனப்படும் மூலிகை வேர் ஒரு இயற்கை வயகரா என நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் காடுகளில் இயற்கையாக கிடைத்த இந்த மூலிகைக்கு இப்போது மார்கெட் டிமாண்ட் இருப்பதால் சீனர்கள் அதை பயிரிட ஆரம்பித்தார்கள். வழக்கம்போல அதற்கும் பூச்சி மருந்து தெளித்து இருப்பதாக இப்போது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதுவும் உலக சுகாதார நிறுவனமான WHO தடைசெய்து இருக்கும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.இந்த ஜிங்செங் மனிதனின் ரத்த அழுத்தத்தை குறைத்து அவனை செயல் வீரனாக்குவது போய் நோயாளி ஆக்கும் என்கிறது ஆய்வுகள்.
omega 3
ட்யூனாவி ஈயம்
நமது ஊரில் சூரை என்று அழைக்கப்படும் ட்யூனாவுக்கு உலகளாவிய மார்கெட் இருக்கிறது. அதற்கு காரணம்,அதில் இருக்கு ஒமேகா -3 மற்றும் புரோட்டின். சீனா ஆயிரக்கணக்கான டன் ட்யூனாவை டப்பாவில் அடைத்து ஏற்றுமதி செய்கிறது.சீனாவில் ட்யூனா மீன் வளர்ப்பு பண்ணைகள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் இருப்பதால் அந்த ஆலை கழிவுகளில் உள்ள ஈயம் ட்யூனா மீனில் கலந்திருக்கிறது, என்று மிரட்டுகிறது இன்னொரு ஆய்வு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், சோயா சாஸில் மெத் - 4,முட்டையில் பாரஃபின்,ஆட்டுக்குட்டி கறி என்கிற பெயரில் எலிக்கறி,ஒயினில் சர்கரைப் பாகு,இன்னும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் டீ முதல் தர்பூசனி வரை அனைத்துமே தடைசெய்யப்பட்ட பூச்சிமருந்துகள் தெளிக்கப் பட்டவை.அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்கின்றன ஆய்வுகள்.அவ்வளவு ஏன்,நாய் பூனைகளுக்கான பெட் ஃபுட்டிலும் கலப்படமாம்.
Powered by Blogger.