நீட் தேர்வு எதிரொலி!!

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் அதிமாகி உள்ளதாக கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.



2010ஆம் ஆண்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் உட்பட 242 சி.பி.எஸ்.இ பள்ளிகள் தமிழகத்தில் இருந்தன. 2011 ஆம் ஆண்டில் தமிழக சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 259ஆக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 60 பள்ளிகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தொடங்கப்பட்டு 319 பள்ளிகளாக உயர்ந்தன. 2013ஆம் ஆண்டில் 107 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ அனுமதி அளித்திருந்தது. இதனால் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 426ஆக உயர்ந்தது. 2014ல் கூடுதலாக 83 பள்ளிகள் திறக்கப்பட்டு 509ஆக சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. அதேபோல், 2015ல் 582, 2016ல் 654 சி.பி.எஸ்.இ பள்ளிகள் என எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. 2017ல் மட்டும் புதிதாக 85 பள்ளிகள் திறக்கப்பட்டு தமிழக சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 739 ஆனது. 2018ஆம் ஆண்டில் 89 பள்ளிகள் திறக்கப்பட்டு 828 பள்ளிகளாக உயர்ந்தன. அதிகபட்சமாக நடப்பாண்டில் மட்டும் 143 பள்ளிகளுக்கு புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 971ஆக உள்ளது. 2010ஆம் ஆண்டிற்கு பிறகு 729 சி.பி.எஸ்.இ பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. சமச்சீர் பாடத்திட்ட அறிமுகம் மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் அறிமுகம் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் தேவையை அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.