தமிழீழத்தின் வாழ்வு,அடையாளம்,குறியீடாக இருப்பது கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்!!

தமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்..

இந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை  உணர்ந்த  தலைவர் அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இந்திய இராணுவ முற்றுகை உட்பட அதற்கு பின்னான பல சிங்களப் படையெடுப்பு காலங்களிலும் போராளிகள் வடதமிழீழத்திற்கும் தென் தமிழீழத்திற்கும் இலகுவாக சென்று வரவும் தமது காப்பரண்களை பாதுகாப்பாக அமைத்து கொள்ளவும் வனப்பகுதிக்கும் அங்கு வாழும் வன உயிர்களுக்கும் சேதம் வினைவிப்பதை அறிந்த தலைவர் போராளிகளிடம் ” நீங்கள் பாதையை மாற்றியமையுங்கள், அல்லது எதிரியின் முற்றுகையை உடைத்து போய் வாருங்கள், எந்த காரணம் கொண்டும் வனவளத்தை அழிக்க கூடாது” என்று இறுக்கமாக கட்டளையிட்டதும் பலருக்கு தெரியாது.

விளைவாக போராளிகள் பெரும் ஆயுத தளபாட சுமைகளுடன் நீண்டதூரம் நடந்து பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல இதன் விளைவாக பல தருணங்களில் எதிரிகளை நேரடியாக சந்தித்து மோதி களப்பலியாக வேண்டியும் ஏற்பட்டது.

இவர்களைத்தான் 'பயங்கரவாதிகள்' என்று அழித்துவிட்டு இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில் உலகம் மாசுபடுவதாக ஒப்பாரி வைக்கிறது உலகம்.

#WorldEnvironmentDay.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.