மனநடுக்கம்..!!

எமக்கான விடுதலைக் குரலாக
ஒலிப்பது மனநோய் என்றால்
அந்த நோயாளியாகவே இருக்க
விரும்புகின்றவரில் நானுமொருவன்!

எமக்காக வீழ்ந்தவரின் கனவுக்காக
கால்கள் ஓயாது பயணிப்பது வீண்விரயம் என்றால் அந்த வீண்விரயத்தினை செய்வதற்கு
தயாராகவே இருக்கின்றோம்!

அறத்திற்காக அரும்பணியாற்றும் பணியாளர்
சுயநலவாதிகளுக்கு
வியாபாரிகளாக தெரிந்தால் அந்த
வியாபாரத்தை செய்வதே
செயற்பாட்டாளரின் கடமையாக
நினைக்கின்றோம்!

தேசிய விடுதலைப்போராட்டத்தினை
பலவீனப்படுத்துவோரை கேள்வி கேட்பது தவறென்றால்
தவறென்று  கேட்போரும் பலவீனமானவர்கள் என்றே
உணர்கின்றோம்!

மனச்சாட்சியை மறக்கின்ற மனிதர்களின் மண்டையின்
உள்த்தட்டில்  துரோகங்களை
உணரவைப்பது பிழையென்றால்
பிணங்களாக வாழ்வதில்
அர்தமில்லை என்றே
கவலையடைகின்றோம்!

மகா தலைவன் பிரபாகரன் என்று
பாடிய வாய்கள்
கொலைகாரன் என்று கொக்கரிக்கும்
கோதாரி விழுந்த இனத்தில்
ஓர் உதிரியாக பிறந்தேனென
என்னை நானே சபித்துக்கொள்கிறேன்!

என் மனதில் பட்டதை வரிகளால்
கோர்த்து விடுகின்றேன்
ஏற்பதும் ஏற்காததும் அவரவர் பொறுப்பு!
மனநடுக்கத்தை கண்ணாடியில்
காட்டுவது என் விருப்பு!

✍தூயவன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.