மம்முட்டிக்கு ஜோடியான பேஸ்கட் பால் வீராங்கனை!

மம்முட்டி நடிக்கும் மாமாங்கம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிவரும் இந்தப் பிரமாண்ட படத்தின், மலையாளம் பதிப்பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. வேணும் குந்நபிள்ளியின் தயாரிப்பில், பத்மகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், மாமாங்கம் என்னும் நதிக்கரை திருவிழா 12 வருடங்களுக்கு ஒருமுறை 28 நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. பல நாட்டவர்களும் கலந்துகொள்ளும் அந்தத் திருவிழாவை யார் நடத்துகிறார் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாக உணரப்பட்டிருந்தது. எனவே, திருவிழா நடத்தும் உரிமைக்காகப் பல போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தது. அந்த வரலாற்றைக் கூறும் படமாக மாமாங்கம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமாங்கம் திரைப்படத்தின் திரைக்கதை எழுதி இருக்கும் சஜீவ் பிள்ளை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலான ஆராய்ச்சியின் முடிவில் இந்தத் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
இந்தப் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து கதாநாயகியாக பிராச்சி தெஹ்லான் நடிக்கிறார். மாமாங்கம் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகும் இவர் இந்திய நெட்பால் மற்றும் பேஸ்கட் பால் வீராங்கனை. இந்தியாவின் சார்பாக பல ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களும் பெற்றிருக்கிறார். 

54ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களுக்குப் பிறகு மம்முட்டியின் நடிப்பில் தமிழில் வெளியான 'பேரன்பு' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் மாமாங்கம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments

Powered by Blogger.