அரியஇன பறவைகளின் இறப்பு குறித்து விசாரணை!!

அவுஸ்ரேலியாவில் பல பறவைகள் வீழ்ந்து மரணித்துள்ளமைக்கு விச வாயு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


அவுஸ்ரேலிய மீட்பு பணியாளர்கள் குறித்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அடேலைட் நகரின் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் ஏறக்குறைய 57 இற்கும் அதிகமான கொரில் இன பறவைகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பறவை இனமானது பாதுகாக்கப்படும் அரியவகை இனங்களில் ஒன்றாக காணப்படுவதால் இது தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்தது.

குறித்த பறவைகள் பறக்க முடியாமல் மைதானத்தின் தரைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும், சில பறவைகள் வாய் வழியே இரத்தம் வெளியேறி இறந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக அவுஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்ரேலியா சார்பான விசாரணைக்குழு இது பற்றி தெரிவிக்கையில் குறித்த பறவை இனங்களின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும், ஆனாலும் இவை நச்சுப்பரவல் காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.