லெப்.கேணல் சூட்டி உட்பட 15 போராளிகளின் வீரவணக்க நாள்...!

லெப்.கேணல் சூட்டி உட்பட 15 போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.
ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கையின்போது 14.07.1991 அன்று வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 15 போராளிகளின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..

ஆனையிறவு படைத்தளம் மீதான “ஆகாய கடல் வெளி” நடவடிக்கை விடுதலைப் புலிகளால் 10.07.1991 அன்று தொடங்கப்பட்டது. இந் நடவடிக்கையை முறியடிப்பதற்காக 14.07.1991 அன்று ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரின் வெற்றிலைக்கேணிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு கடற்படைக் கலங்களிலிருந்தும் தரையிலிருந்தும் பலத்த எறிகணை சூட்டாதரவுடன் முன்னகர்ந்து ஆனையிறவு நோக்கிய நகர்வு தொடங்கப்பட்டது.

|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…..
லெப்.கேணல் சூட்டி (சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன் – கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
மேஜர் லவன் (துரைசிங்கம் ராஜ்சங்கர் – கொழும்பு, சிறிலங்கா)
கப்டன் சோலை (சத்தியாப்பிள்ளை கிறிஸ்ரிகஜேந்திரன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் யாதவன் (கந்தையா கமலக்கண்ணன் – பாண்டியன்தாழ்வு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குணேஸ் (செல்வராஜா பேரின்பமோகன்ஆதவன் – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சந்திரன் (சங்கரப்பிள்ளை அன்பரசன் – நவாலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மாக்கிறட் (சாந்தி சிற்றம்பலம் – உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பழனி (அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை றெஜி (பொன்னையா பத்மநாதன் – வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாரத் (இராசதுரை குணராசன் – உடுவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை விஸ்வலிங்கம் (செல்வராஜா சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கண்ணன் (தர்மன்பிள்ளை ஏகாம்பரம் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை தவம் (தனம்) (அருளம்பலம் சௌந்தராஜன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெகன் (கந்தசாமி சரவணபவன் – செல்வநாயகபுரம் திருகோணமலை)
வீரவேங்கை சுரேஸ் (சுப்பிரமணியம் சிவகுமார் – சித்தன்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.