மதம் கடந்து கன்னியாவில் கூடிய தமிழ்மக்கள்!!


இலங்கையை ஆண்ட பத்து தலைகளை கொண்ட அரசன் இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி கன்னியாவின் ஏழு இடங்களில் குத்தியதாகவும், அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஐதீகம் உள்ளது.



இவ்வாறான ஐதீகத்தை கொண்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது.

கன்னியா வெந்நீருற்று கிணறுகள் அமைந்திக்கும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக செல்ல முயன்ற தமிழ் மக்களை இராணுவம் மற்றும் பொலிஸார் சுமார் ஒரு கிலோமீற்றர் துாரத்தில் கன்னியா பிரதான வீதியில் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழல் காணப்படுகின்றது.

மேலும், ஆர்ப்பாடட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருந்த பிரதேசத்திற்கு குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகர்த்தியர் அடிகளார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது, அங்கு குழுமியருந்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் அநாகரிகமாக அணுக முற்பட்டதையடுத்து பேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்ட பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர் குழுமியிருந்த இடத்திற்கு அவர்களை திருப்பி அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அநாகரிகமாக அணுக முற்றபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறும் தாங்கள் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை காண்படுவதாகவும் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் இருந்து திரண்டு வந்துள்ள பல்வேறு  தமிழ் மக்கள் குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்றார்கள்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் மதம் மற்றும் இனவாதம் தலை தூக்கியுள்ள நிலையில் தமிழர்களின் வரலாற்று பிரதேசத்தை காப்பாற்ற இன, மத, பேதங்களை கடந்து தமிழர்கள் என்ற அடிப்படையில் கிறிஸ்தவ மதகுருமார்களும் இணைந்துள்ளமை நாட்டு மக்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள சிறந்ததொரு பாடமாகும்.

தமிழர்களின் விடுதலையை நோக்கிய போராட்ட வரலாற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ குருமாரின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகித்தது. அவர்களின் ஒற்றுமையே வடக்கு, கிழக்கு தமிழர்களின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்த ஒற்றுமையை கூட சிதைக்க சிலர் முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எனினும் இவர்களின் ஒற்றுமை என்றுமே கலங்கப்படவும் இல்லை, தாமதப்படவும் இல்லை என குறிப்பிடுகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.