உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி!!
பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்து.
சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.
78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.
அதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.
அத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.
3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை