நற்பணியில் நற்பணி மன்றம்; சாதிக்கும் திருகோணமலை இளைஞர்கள் !!!📷

திருகோணமலை மாவட்டத்தில் நற்பணி மன்றம் அமைத்து பாழடைந்து துர்வாறி போன நிலையில் பலரின் தற்கொலை இடமாக திகழ்ந்த சேரும் குப்பை கூழங்களால் நிறைந்த காணப்பட்ட ஆனந்தபுரி  கிணற்றை   சுத்தம் செய்யும் பணியில் இங்குள்ள திருமலை வாழ்  இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகர் உட்பட கிராமங்களில் ரசிகர் நற்பணி மன்றம் செயல்படும். தங்களது விரும்பிய நடிகர் நடித்த சினிமா படம் வெளியானால், கோலாகலமாக கொண்டாடுவர். இதற்காக சில இடங்களில் வசூல் செய்து , மீதத்திற்கு தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தையும் செலவு செய்வர். இந்த செலவு நல்லவிஷயங்களுக்காக இருக்காது.

பாலாபிஷேகம்கட் அவுட் தயாரித்து போக்குவரத்து இடையூறு, அனுமதி பெறாமல் தனியார் சுவர்களில் நோட்டீஸ் ஒட்டுதல், எலுமிச்சை பழங்கள், பூக்களால் ஆன ஆளுயர மாலை போடுதல் போன்றவை நடக்கும். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சினிமா வெளியான அன்று கட்-அவுட்க்கு பாலாபிஷேகம், மலர் துாவுதல், கற்பூரம் கொளுத்தி கையில் வைத்து ஆரத்தி எடுத்தல் போன்ற முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு.

தமிழ்நாட்டை பொருத்தவரை  சினிமா நடிகர்   நற்பணி மன்றம் என்றால், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்றவற்றில் விழா நடத்திவிட்டு சென்றுவிடுவர். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்துவர். விழா முடியும் நேரத்தில் மதுபோதையில் மன்றத்தினருக்குள் தகராறு செய்து, செய்த நல்லகாரியத்தை மக்கள் மறக்கும்படி செய்துவிடுவர். இதுபோல் அல்லாமல் ஆனந்தபுரி கிராமத்தில் உள்ள சுகாதார , நிலத்தடி நீருக்கு எமனாகும்  கிணற்றை திருத்தி சுத்தப்படுத்திய  இளைஞர்கள் செய்து வருகின்றனர். இதற்காக திருகோணமலை விஜய் இளைஞர் நற்பணி மன்றத்தை துவக்கி உள்ளனர்.  கிராம பிரச்னையை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பிடம் பலமுறை கூறியும் நடவடிக்கையில் தேக்கம் காணப்பட்டது. முடிவில் அப்பகுதி இளைஞர்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர்  குழுக்களாக பிரிந்து, வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிறன்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இன்று திறம்பட செய்து முடித்தார்கள்.

 கிராமத்திலுள்ள பாவனையற்று காணப்பட்ட அதிக நீர் ஊற்றுள்ள பொதுக் கிணற்றை நாமே சுத்தம் செய்து, சுகாதாரமாக மக்கள் வாழ வழி செய்யலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் ஏற்பட்டது. இதற்காக இளைஞர் நற்ணி மன்றத்தை இதுபோன்று இளைஞர்கள் தாங்களே முன் வந்து கிராம வளர்ச்சிகளில் ஈடுப்பட துவங்கினால், கிராமம் என்ன தமிழர் பகுதியே  அபார வளர்ச்சி பெறும். ----

வாழ்த்துக்கள் திருகோணமலை விஜய் நற்பணி மன்ற உறுப்பினர்கள் உங்கள் பொதுச்சேவை மேலும் மேலும் தொடரட்டும்,என தமிழ் அருள் இணையம் வாழ்த்தகின்றது.

.











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.