தீ விபத்தில் புத்தக விற்பனை நிலையம் தீக்கிரை!
மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விற்பனை நிலையத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 5 மணியளவில் தீ மற்றும் புகை வெளிவருவதை அவதானித்த அயலவர்கள் விற்பனை நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குறித்த உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தீயை அனைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும், மன்னார் நகர சபைக்கும் தெரியப்படுத்தினர்.
தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
எனினும் குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களுமே எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்த விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை