தமிழர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு – வேலுகுமார்!!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் தமிழ் சமூகம் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
அத்தோடு, தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளதாகவும் எனவே இந்த விடயத்தில் இழுத்தடிப்புச் செய்யாமல் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியின் பிரகாரம் பூர்வாங்க செயற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பமாகின.
காலப்போக்கில் அந்த பயணம் மந்தகதியை அடைந்து தற்போது முற்றாக முடங்கும் கட்டத்தில் உள்ளது. எனவே, முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்படவேண்டிய இந்தப்பிரச்சினையை விடுத்து, பிரதான அரசியல் கட்சிகள் ஏனைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்றிட்டத்துக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கருத்தறிவது உட்பட இதர பணிகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அந்தப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பதை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவோ அல்லது எதிரணிக்கு கிடைத்த வெற்றியாகவோ கருதமுடியாது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகவே கருதவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் பேரிழப்பு ஏற்பட்டிருக்காது என கடந்தகாலங்களில் பல தரப்புகளும் விமர்சனங்களை முன்வைத்தன. இன்று தமிழர் தரப்புகள் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்றன. ஆனால் நடப்பது என்ன?
அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டுவருகின்றது. குறிப்பாக பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழர் தரப்பால் பல விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. இனியும் விட்டுக்கொடுப்பு செய்வதாக இருந்தால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டத்தைதான் கைவிடவேண்டும். எனவே, விட்டுக்கொடுப்பின் பெறுமதியை இனியாவது உணருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நாட்டிலே நிலையான சமாதானம் மலரவேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு கட்டாயம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எவர் ஜனாதிபதியானாலும் முன்நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கின்றது. அதை மீண்டும், மீண்டும் சோதனைக்குட்படுத்தி நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை