பிணை அனுமதியை கோரும் முன்னாள் பிரதமர்!

ஊழல் மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு டாக்கா சிறையில் உள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பிணை வழங்க கோரி டாக்கா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா, 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் தனது பதவி காலத்தின்போது அவரது மறைந்த கணவர் ஜியாவுர் ரஹ்மான் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் 2½ லட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஊழல் வழக்கில் காலிதா ஷியாவுக்கு, 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தீர்ப்புளித்தது.

அத்துடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஒக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் தற்போது தலைநகர் டாக்கா சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பிணையில் செல்ல அனுமதி வழங்க கோரி காலிதா ஷியா, டாக்கா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், சர்க்கரை நோய் மற்றும் பல் சார்ந்த நோய்களால் தான் அவதிப்பட்டு வருவதாகவும், தனக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.