“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததா?

சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்து நண்பர் ஒருவர் தேவடியா என்ற சொல்லே மருவி மீடியா என்று வந்துள்ளது என முகநூலில் எழுதியிருந்தார்.


இதைப் படித்தபோது சீச்சீ அப்படி இருக்காது என நினைத்தேன். ஆனால் இப்போது வித்தியாதரனின் மணிவிழாவைப் பார்க்கும்போது அந்த தமிழக நண்பர் எழுதியது உண்மையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

புலிகளின் விமானம் கொழும்பில் குண்டு வீசும்போது கொழும்பில் இருந்து வித்தியாதரன் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசுவார். இந்த செய்தியை கோத்தபாயாவே கூறியிருக்கிறார்.

இது தெரிந்திருந்தும் இலங்கை ராணுவம் ஏன் வித்தியாதரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணம் வித்தியாதரனின் மணிவிழா காட்டியுள்ளது.

ரணில், மகிந்த ராஜபக்ச, சுமந்திரன், டக்லஸ் என அனைவரையும் ஒரே இடத்தில் தன் மணிவிழாவிற்கு அழைத்து பவர் காட்டியுள்ளார் வித்தியாதரன்.

இவர் மட்டுமல்ல இவருடைய மைத்துனர் சரவணபவன் எம்பி யும் தன் மகள் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி மைத்திரியை அழைத்து பவர் காட்டியிருந்தார்.

புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஐயர் ஒருவர் இப்பவும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விருந்துண்ட வித்தியாதரன் மணிவிழாவில் ரணில் மகிந்த ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கதிர்காமர் வீட்டு வேலியில் இருந்த மரங்களை கூலிக்கு வெட்டிய குற்றத்திற்காக மலையக தமிழர் ஒருவர் 13 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையிலும் அரசு அவரை விடுதலை செய்யவில்லை. இறுதியாக கடந்த வாரம் அவர் சிறையிலேயே இறந்தார்.

ஆனால் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் பேசியது தெரிந்தும் இலங்கை ராணவம் வித்தியாதரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பொது வித்தியாதரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என நாம் கோரவில்லை. மாறாக தன் மணிவிழாவுக்கு இத்தனை தலைவர்களையும் அழைக்கும் செல்வாக்கு கொண்ட வித்தியாதரன் அந்த செல்வாக்கை கொஞ்சம் சிறையில் இருக்கும் கைதிகளின் விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

வித்தியாதரன் வெறும் ஊடகவியலாளர் மட்டுமல்ல. அவர் ஒரு அரசியல் அமைப்பின் தலைவரும் கூட. எனவே சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு உதவ வேண்டியது அவரது கடமையும்கூட.

இன்றைய நிலையில் ரணில் மகிந்த போன்றவர்களை அழைத்து மணி விழா கொண்டாடினால் நிச்சயம் கடும் விமர்சனம் வரும் என்பது வித்தியாதரனுக்கு நன்கு தெரியும்.

நன்கு தெரிந்தும் மணிவிழா கொண்டாடியது மட்டுமன்றி அந்த போட்டோக்களை துணிந்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் என்றால் அவருக்கு அந்த தைரியம் எப்படி வந்தது?

சரணடைந்த போராளி தலைவர்களை கொன்றுவிடுங்கள் என்று பசில் ராஜபக்சவிடம் கூறிய சம்பந்தரையே மக்கள் தெரிவு செய்கிறார்கள் என்றால் தன்னையும் தெரிவு செய்வார்கள்தானே என்று வித்தியாதரன் நம்புகிறார் போலும்.

ஆனால் மக்கள் மகத்தானவர்கள். கடந்த தேர்தலிலும் அவர்கள் வித்தியாதரனை தோற்கடித்தார்கள். இனிவரும் தேர்தல்களிலும் நிச்சயம் தோற்கடிப்பார்கள். இது உறுதி.

-பாலா-

No comments

Powered by Blogger.