வரியில்லா மண்ணில் வாழ்வும் இல்லை!!

புலியில்லா மண்ணில்
புனிதம் இல்லை
வரியில்லா மண்ணில்
வாழ்வும் இல்லை

நரக வாழ்வு நகர்கிறது
ஆஸ்திகனும் இல்லை
நான் நாஸ்திகனும் இல்லை
அண்ணண் இல்லா
ஈழமதில் வாழ்வதில் அர்த்தமில்லை

போகும் வழியெங்கும்
போலி மனிதர்கள்
புகழ் மாலை தோடும்
தமிழ் அரசியல் தறுதலைகள்

அசிங்கங்கள் அரங்கேறும்
அண்ணண் காத்த காடுகள்
அண்ணண் நீயில்லா தேசமதில்
யாவரும் மனிதமில்லா
எலும்புக்கூடுகள்

கந்தகம் சுமந்தபோது
வலியில்லை
வேழம் இல்லா ஈழமதில்
ஒழுக்கமில்லை

சொல்லித்திருத்
அண்ணண் நீயில்லை
சொன்னால் திருந்த
இன்றும் ஈழமதில்  யாருமில்லை

வீரமது கொஞ்சமும் இல்லை
இராணுவம் வந்தால்
ஆராத்தி எடுத்து பொட்டுவைத்து
வரவேற்குது தன்மானம்
இழந்த தமிழ் பிள்ளை

ஆதவன் அண்ணண்
 நீ வரவேண்டும்
ஈழக்கனவுகளோடு வாழும்
எம்மவருக்கு இன்னுயிர் தரவேண்டும்

-மன்னார் பெனில்-
2019.07.05

No comments

Powered by Blogger.