துப்பாக்கியென் தோழன்!!

துப்பாக்கி யென் தோழன்
துவண்டோர்க்கு தப்பாமல் குறிகாட்டும் வீரன்

சிம்மத்தின் சிரமறுக்கும் வரம்
தமிழன் வேர்விட்ட விடமெல்லாம்
வல்லமையை நாட்டும் தீரன்

கடல் மீதில் நாம் பட்ட வலிமறக்க
புட்பகத்தில் நாமெல்லாம் மிதந்துவிட
கடலோடி வீரமீட்ட இராவண சேனை
இனி கிலிகொள்ளா நிலைகொண்ட
வேங்கையின் ரத்தம்

அடிமைகளை உடைப்பது நம் கடன்
அடிமேலடியடித்தால் இன்றே நமது
படிகளை கடக்கும் வல்ல தலை
இடிமேலிடி விழுந்தாலும்
இரவெரிக்கும் கொற்றவை மகன்

இனி விழிப்பே முதல் படி
அதற்காய் அணைத்தபடி
துப்பாக்கியுன் குடி
தப்பாமலதைப் பிடி
-த.செல்வா-

No comments

Powered by Blogger.