அக்டோபரை குறிவைக்கும் அசுரன்?
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அசுரன் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடசென்னை படத்தின் வெற்றிக்குப் பின், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக் கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். கருணாஸ் மகன் கென் முக்கிய கதாபாத்திரமொன்றை ஏற்றுள்ளார்.
தனுஷ் அப்பா-மகன் என்ற இரு பாத்திரத்தில் நடித்து வருகிறார் தகவல்கள் ஆரம்பக்கட்டத்தில் உலா வந்தன. தற்போது வந்துள்ள தகவலின்படி, தனுஷ் ஒரே கதாபத்திரத்தின் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது. மேலும் அக்டோபர் இரண்டாம் தேதி அசுரனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்றாண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று தான் வெற்றிமாறன் - தனுஷின் வடசென்னை வெளியானது. அதே சமயம், செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் மாதம் வரை வெளியான படங்கள் சென்றாண்டின் முக்கியமான படங்களாக பரிணமித்தன. பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் ஆகிய படங்களே அவை.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் அசுரன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பொல்லாத பூமி’ என்ற யுகபாரதியின் வரிகளில் தனுஷ், கென், டீஜே ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துவருகிறார்,
அசுரன் பட வேலைகளுக்கு நடுவே தனுஷ் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் கவனம் செலுத்திவருகிறார். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்திலும் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை