மீண்டும் ரிலீஸ் சிக்கலில் களவாணி 2!!

களவாணி 2 திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

விமல், ஓவியா இணைந்து நடித்து 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது 9 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் தயாராகியுள்ளது. இப்படத்தை சற்குணம் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஆரம்பகட்டத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
ஜூலை 5 ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இயக்குநர் சற்குணம் தன்னிடம் வாங்கிய ரூ.67 லட்சம் பணத்தை வட்டியுடன் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா , சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக இயக்குநர் சற்குணம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். அதுவரை ‘களவாணி 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.