கிளிநொச்சி வறுமையிலும் முதலிடம் வரியிலும் முதலிடம்!!
இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை அதிகரித்து ஆதனவரியை( 10%) மக்களிடம் இருந்து அறவிட தீர்மானித்துள்ளது. பிரதேச சபையில் எதிர் தரப்பின் எதிர்ப்பையும் மீறி தவிசாளர் வேழமாலிகிதன் தன்னிச்சையாக அதிக வரியை அறவிட தீர்மானித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் உள்ளது.வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே போராடுகின்றனர். இந்த நிலையில் பத்து வீதம் ஆதன வரியாக அறவிடுவது என்பது மிகவும் அநியாயமானது.
யாழ் மாநகர சபையில் 6%, நல்லூர் பிரதேச சபையில் 4%, மன்னார் நகர சபையில் 6% கோப்பாய் பிரதேச சபையில் 4%என ஆதனவரி அறவிடப்படுகிறது. ஆனால் கரைச்சியில் மட்டும் 10% அறிவிடப்படுகிறது. வரி விதிப்பில் வேழமாலிகிதன் பிரான்ஸின் பதினாறாம் லூயி மன்னனை விஞ்சிவிடுவார் போலுள்ளது.
மக்களுக்காக பிரதேச சபைகளே தவிர, பிரதேச சபைகளுக்காக மக்கள் அல்ல இதனை தவிசாளர் மனதில் கொள்ள வேண்டும்.வறிய மக்களிடம் அதிக வரியை அறவிடுவது என்பது கொடுங்கோல் ஆட்சியே. இதனையே காட்டாட்சி என்றும் சொல்லுவர்.
சொந்த மக்களை வருத்தி, அவர்களை பிழிந்தெடுத்து அவர்களது முதுகில் வரிச் சுமையை ஏற்றிவிட்டு அந்த கண்ணீரில் ஏறி நின்றுதான் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை
.jpeg
)





கருத்துகள் இல்லை