யாழ்ப்பாணம் இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் நுழைவாயிலாகிறது!

வடக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்காக 8.24 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


முதற்கட்டமாக 50 கூட்டுறவு சங்கங்களின் கீழுள்ள கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் இந்தியா துரித வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியாவுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

இந்திய உதவியுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் 45 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்து சமுத்திரத்தில் இது இந்தியாவுக்கான நுழைவாயிலாக இருக்கும். கொழும்பு துறைமுகம் காரணமாக கொழும்பு நகரம், கட்டுநாயக்க விமான நிலையம் காரணமாக கம்பாஹா மாவட்டமும் அபிவிருத்தியடைந்தன.

இதேபோன்று இந்த இணைப்பு நடவடிக்கைகள் வடக்கின் அபிவிருத்திக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு பொருளாதார பிரச்சினைகள் முறையாக திட்டமிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த திட்டங்கள் பலனளிப்பதை உறுதி செய்வதற்காக வரவு செலவுத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 2.5 பில்லியன் ரூபாய் நிதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி மீன் உற்பத்தியை பூர்த்தி செய்யும் மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கென ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.