நாட்டின் தலைவராக இருக்க கோத்தபாய தகுதியற்றவர்!

இலங்கையில் பரிந்துரைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களில் பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ பிரிவினால் அறிவக்கப்பட்ட வேட்பாளரே பலவீனமானவர் எனஜேவிபி தெரிவித்துள்ளது .


இதனை ஜேவிபி பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் நேற்றையதினம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த காலப்பகுதி முழுவதும், நிதி ஒழுக்கம் அல்லது நிர்வாக ஒழுக்கத்தை பேணுவதில் தனக்கு சிறப்பு திறன்கள் இல்லை என்பதை நிரூபித்ததாககவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ராஜபக்ஷ நாட்டிற்குள் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஜேவிபிக்கு இல்லை என்றும், அரசியல்வாதியாக இல்லாத ஒரு நபர் நாட்டின் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

அதோடு ஜனாதிபதி வேட்பாளருக்கு நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் நாடு மற்றும் மக்களைப் பற்றி நல்ல அறிவு இருக்க வேண்டும் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த காலத்திலும், நம் நாடு ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறியதாகவும், நாட்டின் தலைமை மூத்த சகோதரரிடமிருந்து தம்பிக்கும், தந்தையிடமிருந்து மகனுக்கும் வழங்கப்பட்டதாகவும் அதனால்தான் நம் நாடு இவ்வளவு பெரிய படுகுழியில் சிக்கியுள்ளதெனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.