புடலங்காய் பொரித்த குழம்பு!!
பருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். அந்த வகையில் புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் இப்போதைய சூழ்நிலையில் ஏற்ற காய், புடலங்காய்.
தரமானது எது?
தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப்பார்ப்பது போல புடலங்காயையும் தட்டிப்பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது `மொத்’தென்று சத்தம் வந்தால் அந்தப் புடலங்காயில் விதைகள் சிறியதாக சதைப்பகுதி நிறைந்திருக்கும்.
என்ன தேவை?
புடலங்காய் – கால் கிலோ
தேங்காய்த் துருவல் – 6 டீஸ்பூன்
பாசிப்பருப்பு – ஒரு கப்
மிளகு-சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
புடலங்காயைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர், அத்துடன் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கொதித்துக்கொண்டிருக்கும் காய் - பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு இறக்கவும்.
என்ன பலன்?
எடையைக் குறைக்க உதவும். குறைவான கலோரி, கொழுப்பு இல்லாமல் தேவையான ஆற்றலைப் பெற அனுமதிக்கிறது. குடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 92 சதவிகித நீர்க்கலவை கொண்ட காய் என்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றில் உள்ள பூச்சியை நீக்கும்

.jpeg
)





கருத்துகள் இல்லை