நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார்? முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு!!

பிக்பாஸில் கடந்த வாரம் அபிராமி வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேட் நாமினேஷன் நடைபெற்றது. அந்த வகையில் சாண்டி, தர்ஷன், சேரன் மற்றும் சில வாரத்திற்கு முன் வந்த கஸ்தூரி நாமினேட் செய்யப்பட்டார்கள்.


இதில் சாண்டி, தர்ஷன் நாமினேட் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான் என முன்பே கணிக்கப்பட்டுவிட்டது.

அதனால் சேரன், கஸ்தூரிக்கு இடையே தான் போட்டி இருக்கும் என்று நினைத்தால் சேரன் விஷயத்தில் லொஸ்லியாவின் செயலால் அவர்மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு மொத்தமும் சேரனுக்கு ஓட்டாக மாறி சாண்டி, தர்ஷனுக்கு இணையான ஓட்டு எண்ணிக்கையை பெற்றுவிட்டார்.

அதேசமயம் கஸ்தூரியை யாரும் கண்டுக்கொள்ளாததால் அவர் இவர்கள் மூவரை விடவும் மிகவும் பின்தங்கியுள்ளார். இதே நிலை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்தால் வந்த சில வாரங்களிலேயே கஸ்தூரி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.