பளை வைத்தியரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும் பதில் வைத்தியரை நியமிக்குமாறு கோரியும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.